» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி பேருந்து நிலையத்தில் புறக்காவல் நிலையம் அமைக்க கோரிக்கை!
வெள்ளி 8, டிசம்பர் 2023 4:13:24 PM (IST)
தூத்துக்குடி பேருந்து நிலையத்தில் பயணிகளின் பாதுகாப்பு கருதி புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அண்ணா பேருந்து நிலையம் முழுமையாக இடித்து அகற்றப்பட்டு அதிநவீன வசதிகளுடன் பேருந்து நிலையம் கட்டப்பட்டு சமீபத்தில் திறந்து வைக்கப்பட்டது. இந்த பேருந்து நிலையத்தை பெண்கள், மாணவ, மாணவிகள் பொதுமக்கள் என பலரும் பயன்படுத்தி வருகின்றனர்.
இரவு நேரங்களில் பேருந்து நிலையத்தில் போலீஸ் பாதுகாப்பு இல்லாததால் பெண்கள் மத்தியில் பாதுகாப்பு குறித்த அச்ச உணர்வு ஏற்படுகிறது.. எனவே, பெண்கள், மாணவிகள், மற்றும் பயணிகளின் பாதுகாப்பு கருதி பேருந்து நிலையத்தில் புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
MukilaDec 9, 2023 - 07:19:43 AM | Posted IP 172.7*****