» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் 13ஆம் தேதி குடிநீர் விநியோகம் இருக்காது : மாநகராட்சி ஆணையர் தகவல்!

வெள்ளி 8, டிசம்பர் 2023 3:16:30 PM (IST)

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் வருகிற 13ஆம் தேதி குடிநீர் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து மாநகராட்சி ஆணையர் ச. தினேஷ் குமார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் "தூத்துக்குடி மாநகராட்சிக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படும் கலியாவூர் தலைமை நீரேற்று நிலையத்தில் கீழ வல்லநாடு குடிநீர் சுத்திகரிப்பு நிலைய பகுதிக்கு வரும் மின்சார பாதையான கொம்பு கார நத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் வருகின்ற 13.12. 2023 புதன் கிழமை காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் குடிநீர் விநியோகம் இருக்காது என்ற விபரம் தெரிவிக்கப்படுகிறது. 

எனவே  பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு மாநகராட்சி ஆணையர் ச. தினேஷ் குமார் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்கள்.


மக்கள் கருத்து

J RAJADec 9, 2023 - 10:28:18 PM | Posted IP 172.7*****

என்னய்யா உங்க அரசாங்கம் இஷ்டத்துக்கு தண்ணி நிப்பாட்டுறீங்க தண்ணிய குடுக்குறீங்க மக்கள் நீங்க நினைச்சா தான் தண்ணி குடிக்கனுமா நினைச்ச நேரத்துல தண்ணி குடிக்க முடியாதா என்னதான் டெக்னாலஜி

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham HospitalThoothukudi Business Directory