» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு: நிவாரணப் பொருட்கள் வழங்கினார்

வெள்ளி 8, டிசம்பர் 2023 10:03:31 AM (IST)



சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர் கீதாஜீவன் பார்வையிட்டு, மக்களுக்கு நிவாரண உதவி வழங்கினார். 

மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட வரலாறு காணாத அதி கனமழையால் பாதிக்கப்பட்ட சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ராணுவம் மற்றும் கடற்படையினர் மீட்பு பணியில் தொடர்ந்து ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை இயல்பு நிலைக்கு கொண்டுவர அரசு இயந்திரம் ஓய்வின்றி பணியாற்றி வருகிறது. தகவல் தொடர்பு துண்டிப்பால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். 

எனினும், பல பகுதிகளில் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சரின் கட்டளையை ஏற்று தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் இன்று சென்னை மாநகராட்சி 192வது வார்டை சேர்ந்த நீலாங்கரை பகுதியில் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டு நிவாரணப் பொருட்களை வழங்கினார். 



மேலும், சென்னை மாநகராட்சி 186வது வார்டுக்கு உட்பட்ட புழுதிவாக்கம் - ராம் நகர் பகுதியில் உள்ள மக்களுக்கு அமைச்சர் கீதாஜீவன் நிவாரணப் பொருட்களை வழங்கினார். அமைச்சர் சி.வி. கணேசன், சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ் தூத்துக்குடி மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் கருணாநிதி, தூத்துக்குடி மாநகராட்சி வடக்கு மண்டல தலைவர் நிர்மல்ராஜ் உள்ளிட்டோர் உடன் சென்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





CSC Computer Education

Arputham Hospital




Thoothukudi Business Directory