» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
புகையிலை பொருட்கள் விற்ற 3 கடைகளுக்கு சீல் வைப்பு
வெள்ளி 8, டிசம்பர் 2023 8:13:21 AM (IST)
சாத்தான்குளம் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்பட்ட 3 கடைகளுக்கு உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள் மற்றும் குட்கா போன்றவை சட்ட விரோதமாக விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி செல்லப்பாண்டியன் தலைமையில்
சாத்தான்குளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் எட்வின் ராஜதுரை மற்றும் போலீசார் பேய்க்குளத்தை சேர்ந்த பார்த்தீபன், சாலை புதூரை சேர்ந்த குணசேகரன் ஆகியோரது கடைகளில் சோதனை நடத்தினர்.அப்போது அந்த கடைகளில் சட்ட விரோதமாக புகையிலை பொருட்கள் மற்றும் குட்கா விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கடைக்காரர்கள் மீது ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில், மீண்டும் புகையிலை பொருட்களை விற்று வந்ததால், அந்த 2 கடைகளுக்கும் அதிகாரிகள் சீல் வைத்தனர்.
தொடர்ந்து சாத்தான்குளம் அருகே சடையன் கிணறு விலக்கில் வள்ளி நாயகம் என்பவரது கடையில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது அந்த கடையிலும் புகையிலை பொருட்கள் விற்று வந்தது தெரிய வந்தது. இதையடுத்து அந்த கடைக்கும் சீல் வைக்கப்பட்டது. இந்த 3 கடைகளில் விற்பனைக்கு வைத்திருந்த தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சாணைக்கல்லில் சிந்து எழுத்துக்கள் கண்டெடுப்பு : பட்டினமருதூரில் தொல்பொருள் அதிசயம்!
திங்கள் 15, டிசம்பர் 2025 11:38:21 AM (IST)

தூத்துக்குடி சிவன் கோவிலில் மார்கழி மாதம் பூஜை நேரங்கள் மாற்றம்
திங்கள் 15, டிசம்பர் 2025 11:07:46 AM (IST)

தூத்துக்குடியில் ஆட்டோ கவிழ்ந்து விபத்து: 10 மாணவிகள், டிரைவர் காயம்!
திங்கள் 15, டிசம்பர் 2025 10:17:22 AM (IST)

தூத்துக்குடி - நாசரேத் திருமண்டல தேர்தலில் 100% வெற்றி : எஸ்டிகே ராஜன் அணியினர் பேட்டி
திங்கள் 15, டிசம்பர் 2025 8:04:02 AM (IST)

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: பள்ளி ஆசிரியர் கைது
திங்கள் 15, டிசம்பர் 2025 7:52:26 AM (IST)

மினிலாரியில் கடத்தப்பட்ட ரூ.10 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல் : 5 பேர் கைது
திங்கள் 15, டிசம்பர் 2025 7:50:35 AM (IST)










