» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாவட்டத்தில் கொடி நாள் வசூல்: ஆட்சியர் லட்சுமிபதி தொடங்கி வைத்தார்

வியாழன் 7, டிசம்பர் 2023 7:47:18 PM (IST)



தூத்துக்குடி மாவட்டத்தில் படைவீரர்கள் தியாகத்தை போற்றும் வகையில் கொடி நாள் வசூலை மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி தொடங்கி வைத்தார்.

முப்படைகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற முன்னாள் படைவீரர்கள் மற்றும் வீர மரணம் அடைந்தவர், உடல் ஊனமுற்றவர்கள் அனைவரது தியாகத்தை போற்றும் வகையில் நாடு முழுவதும் மத்திய மாநில அரசால் டிசம்பர் 07 கொடி நாள் விழா கொண்டாடப்படுகிறது.  இந்த விழா 1949 முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. மாவட்ட ஆட்சியர் அவர்களால் அவரது முகாம் அலுவலகத்தில் வைத்து இன்று கொடி நாள் வசூல் தொடங்கி வைத்தார். 

படைவீரர் கொடிநாள் 2023-ம் ஆண்டிற்கான தேநீர் விருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள முத்து அரங்கத்தில் மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி.இஆ.ப., தலைமையில் நடைபெற்றது. பின்னர் மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி பேசியதாவது: தூத்துக்குடி மாவட்டத்திற்க்கு பெருமை சேர்த்த முன்னால் படைவீரர்கள் மற்றும் அவரது குடும்பத்திற்கும், இங்கு வருகை தந்துள்ள பல்வேறுத் துறையை சார்ந்த அனைவருக்கும் முதல் கண் வணக்கம். வருடம் தோரும் டிசம்பர் 7ம் தேதி முக்கியமான நாளாக அமைந்துள்ளது. 

அது நமது தேசத்தை காக்கும் கடுமையான நிலைகளில் பிரதேசங்களில் பணியாற்றி தங்கல் உயிரையும் துட்சமாக நினைத்து நாட்டிற்காக உழைத்து பெருமை சேர்த்துள்ள முன்னால் படைவீரர் அனைவரது தியாகத்தை போற்றக்கூடிய வகையில் இன்றைய தினம் அனுசரிக்கபடுகிறது. இந்த நிகழ்ச்சியில் முக்கியமாக நாம் அவர்களின் வீரத்தையும் தியாகத்தையும் நினைவு கூறும் வகையில் அவர்களுக்கு நாம் செய்ய வேண்டிய கடமை என்ன என்பதையும் நினைவுகூற வேண்டிய தருணம் இந்த டிசம்பர் 7.

அதற்காக தான் இது போன்ற ஒரு விழாவை ஏற்படுத்தி குறைந்த பட்சம் இந்த ஒரு நாள் அவர்களை சந்திப்பதற்கு ஏற்பட கூடிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது. நான் இங்கு பணியில் சேர்ந்த நாள் முதல் இதுவரை உங்களை சந்திக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. இனிவரும் காலங்களில் கண்டிப்பாக இந்த கூட்டங்கள் அனைத்தும் எனது தலைமையில் நடைபெரும். 

அப்போது உங்கல் குறைகளையும், கருத்துகளையும் சொல்ல ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்ற நிலையில் உங்களை சந்திப்பதற்கு தயாராக இருக்கிறோம். இந்த கொடி நாள் நாம் அனுசரிக்கும் அதே நேரத்தில் என்னென்ன திட்டங்கள் நம் முன்னால் படைவீரர்களுக்கு அரசு ஏற்படுத்தி கொடுத்திருக்கிறது என்பதை நாம் அறிந்திருக்க வேண்டும். உங்களை போன்ற மற்ற குடும்பங்களுக்கு, வீரர்களை இழந்த குடும்பங்களுக்கு, நீங்கல் யாரேனும் சொல்லி அவர்களையும் இந்த கூட்டத்திற்கு அழைத்து வர வேண்டும்.

முன்னால் படை வீரர் நல அலுவகத்தின் மூலம் எந்த வகையான நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு என்னென்ன திட்டங்கள் செயல்படுத்ப்பட்டு வந்தன என்ற விவரங்கள் அளிக்கப்பட்டுள்ளது. அது உங்கள் அனைவருக்கும் தெரிந்திக்கும். கடந்த ஆண்டு மட்டும் கண்பார்வையற்றோர் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. பக்கவாதம் ஆனவர்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. மணவளர்ச்சி குன்றியோர் குடும்ப உறுப்பினர் யாரேனும் இருப்பின் அவர்களுக்கான நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. இதை தவிர மாதாந்திர நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. புற்று நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கும் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

இரண்டாம் உலக போர் ஆயத்த நிதி உதவி, இரண்டாம் உலக போர் ஆயுட்கால நிதி உதவி, மாற்றுதிறனாளிகளுக்கான நிதி உதவி, திருமணம், ஈமசடங்கு நிதி உதவி, கண்கண்ணாடி நிதி உதவி போன்ற பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதை தவர உங்கள் அனைவருக்கும் அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பள்ளி செல்லும் மாணவர்கள், குழந்தைகள் அனைவருக்கும் பல்வேறு திட்டங்கள் உள்ளது. அவை அனைத்தும் முன்னுரிமை உள்ளவர்களுக்கு கண்டிப்பாக வழங்கப்படும்.

இந்த கொடி நாள் வசூல் என்பது உங்களுடைய தியாகத்திற்கு ஈடு இணை கிடையாது. இதற்க்கு அனைத்து துறை அலுவலர்கள் இணைந்து பணியாற்றிருக்கிறார்கள். இது போன்று கொடி நாள் நிதி உதவி தொடர்ந்து நாம் செயல்படுத்துவோம் என மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி.  தெரிவித்துள்ளார்.

இவ்விழாவில் படைவீரர் கொடிநாள் 2021-ம் ஆண்டில் கொடிநாள் நிதிவசூலில் மிக வசூல் புரிந்த 08 மாவட்ட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அவர்களால் வெள்ளிப்பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. மேலும் 56 முன்னாள் படைவீரர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை ரூ.19,65,000/- வழங்கப்பட்டது.

படைவீரர் கொடிநாள் 2022-ம் ஆண்டு மாவட்ட வசூல் தொகை ரூ.1,21,66,800/- (84.49%) மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் அவர்களின் வசூல் தொகை 5.10,60,000/- (100%) ஆக வசூல் செய்யப்பட்டு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாண்டும் (படைவீரர் கொடிநாள் 2023) அரசு நிர்ணயிக்கப்படும் தொகைக்கான இலக்கினை முழுவதுமாக எய்திட மாவட்ட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி.  அறிவுருத்தினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய் சீனிவாசன், தூத்துக்குடி சார் ஆட்சியர் கௌரவ்குமார். உதவி இயக்குநர் முன்னால் படை வீரர் நலன் க.தெய்வசிகாமணி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education

Arputham Hospital








Thoothukudi Business Directory