» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சென்னை மக்களுக்காக ரூ.5 லட்சம் மதிப்புள்ள நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு!

வியாழன் 7, டிசம்பர் 2023 4:12:23 PM (IST)



‘மிக்ஜாம்” புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில் ரூ.5,34,720 மதிப்பிலான புயல் நிவாரண அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய வாகனத்தினை மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி. கொடியசைத்து அனுப்பி வைத்தார்.

பின்னர் மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்” புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டு, அதன் காரணமாக சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மிகக்கடுமையான அளவிற்கு வெள்ளபாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளில் இருந்து பொது மக்களை மீட்கவும், அவர்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

‘மிக்ஜாம்” புயல் சென்னை மாநகராட்சி மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் பெருமளவில் சேதத்தை உண்டாக்கியுள்ளதால், பொதுமக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உரிய நிவாரணத்தை ஒவ்வொரு மாவட்டம் முன் வந்து அனுப்பி உள்ள நிலையில், நம்முடைய தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு முயற்சியாக அவர்களுக்கு தேவைப்படக்கூடிய அத்தியாவசிய பொருட்களான 9422 தண்ணீர் பாட்டில்கள், 3188 கிலோ அரிசிகள், 75 கிலோ பருப்பு வகைகள், 155 கிலோ பால் பவுடர், 20 பாக்ஸ் பிஸ்கட, 3 பாக்ஸ் ப்ரட், 40 போர்வை உள்ளிட்ட ரூ.5,34,720 மதிப்பிலான பல்வேறு அத்தியாவசிய அடிப்படை நிவாரணப் பொருட்கள் முதற்கட்டமாக, இன்று சென்னைக்கு வாகனத்தில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

இதில் பொதுமக்களுடைய பங்களிப்புடனும், தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உதவிகளுடன் தொடர்ந்து அனுப்பி வைக்க உள்ளோம். இதுபோன்ற ஒரு சூழ்நிலையில் பெருமளவில் பாதிப்பை சந்தித்துகொண்டிருக்கக்கூடிய சென்னை போன்ற மாநகராட்சிப் பகுதிகளில் நிவாரணம் அனுப்பி வைக்கும் நிகழ்ச்சியில் அனைவரும் பங்களிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் கோ.லட்மிபதி. கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், தூத்துக்குடியில் பெய்து வரும் மழை குறித்து ஏற்கனவே அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஒருங்கிணைப்புக் கூட்டம் ஒன்று நடத்தியுள்ளோம். மாவட்டத்தில் மழையினால் பாதிப்பு வரும் பட்சத்தில் என்னென்ன முன்னேற்பாடு செய்ய வேண்டும், அதிகமாக பாதிப்பு வரக்கூடிய பகுதிகள் என்னென்ன என்று கண்டறிந்து அதில் என்ன செய்ய வேண்டும் என்று ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. ஏதாவது ஒரு சூழ்நிலையில் மழை வரும் பட்சத்தில் அனைத்துத் துறைகளும் தயார் நிலையில் உள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநாராட்சி ஆணையாளர் ச.தினேஷ்குமார். மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் மு.அமுதா, மாவட்ட நியமன அலுவலர் மாரியப்பன், தூத்துக்குடி வட்டாரப் போக்குவரத்து அலுவலர் விநாயகம் மற்றும் அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.


மக்கள் கருத்து

MauroofJan 12, 2024 - 01:43:13 PM | Posted IP 162.1*****

கனமழையால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்ட மக்களின் தேவைகளை சிறப்பாக முழுமையாக பூர்த்தி செய்து முடித்து விட்டதினால், மிக்ஜாம் புயலினால் பாதிக்கப்பட்ட சென்னை மாவட்ட மக்களின் துயர் துடைக்க தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் புறப்பட்டு விட்டது. இல்லையா, அன்பர்களே?...

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory