» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

குமாரபுரம் பள்ளி பிரச்சினைக்கு தீர்வு : குழந்தைகள் செல்ல வாகனம் ஏற்பாடு..!

புதன் 6, டிசம்பர் 2023 9:43:35 PM (IST)



தெற்கு குமாரபுரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி, கோவில்பட்டி கோட்டாட்சியா் அலுவலகத்தில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட தெற்கு குமாரபுரம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு தலைமை ஆசிரியராக மங்கையர்கரசி என்பவரும், உதவி ஆசிரியராக ரத்தினமாலா என்பவரும் பணியாற்றி வருகின்றனர்.

இந்த பள்ளியில் 23 மாணவ - மாணவிகள் பயின்று வருகின்றனர். இங்குள்ள கட்டிடம் பழமையானதை தொடர்ந்து புதிய கட்டிடம் கட்டப்பட்டு கடந்த 2005-ம் ஆண்டு திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இதில் 2 வகுப்பறைகள், ஒரு தலைமை ஆசிரியர் அறை ஆகியவை உள்ளன. இந்த கட்டிடம் அருகே சமையலறையும் உள்ளது. மேலும், இந்த பள்ளி வளாகத்தில் பழைய வகுப்பறை, சமையலறை கட்டிடங்கள் இடிக்கப்படாமல் உள்ளன. இந்நிலையில், கடந்த மாதம் 8-ம் தேதி மாலை முதல் விடிய விடிய மழை பெய்தது. 

இதில், அன்றிரவு பள்ளியின் இடப்பக்க சுற்றுச்சுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதையெடுத்து பள்ளியில் போதிய பாதுகாப்பு இல்லை, மேலும் இந்த பள்ளியில் வடக்கு குமராபுரம், நடு குமாரபுரம் கிராமங்களை சேர்ந்த மாணவர்கள் தான் அதிகளவில் பயின்று வருகின்றனர். இவர்கள் பள்ளிக்கு வரும் காட்டுபாதை பாதுகாப்பாக இல்லை எனவே பள்ளியை தங்களது கிராமத்திற்கு மாற்ற வேண்டும் அதுவரை குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என்று கூறி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். 

இவர்களுடன் அதிகாரிகள் பலமுறை பேச்சு வார்த்தை நடத்தியும் எவ்வித உடன்பாடும் ஏற்படவில்லை. இந்நிலையில் வடக்கு குமராபுரத்தில் பள்ளி கட்டி தர வேண்டும், இல்லையென்றால் குழந்தைகளின் பள்ளி மாற்றுச்சான்றிதழை தர வலியுறுத்தி பள்ளி குழந்தைகளுடன் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களுடன் கோட்டாட்சியர் ஜேன் கிறிஸ்டி பாய், மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்க கல்வி) மேரி டயானா ஜெயந்தி, வட்டாட்சியர் லெனின், வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேஷ்குமார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், தற்காலிகமாக வடக்கு குமாரபுரம் கிராம குழந்தைகள் பள்ளிக்கு செல்ல வாகனம் ஏற்பாடு செய்வதாக தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட கிராம மக்கள் நாளை முதல் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புகிறோம். அடுத்த கல்வியாண்டில், எங்களது பகுதியில் பள்ளி கட்டிடம் கட்டினால் மட்டுமே குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவோம், என தெரிவித்துவிட்டு கலைந்து சென்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital


CSC Computer Education





Thoothukudi Business Directory