» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு மின்னொளி கைப்பந்து போட்டி : அமைச்சர் கீதாஜீவன் அறிக்கை
புதன் 6, டிசம்பர் 2023 7:57:52 PM (IST)
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடியில் ஆண்கள் / பெண்கள் மின்னொளி கைப்பந்து போட்டி நடைபெற உள்ளது.
இது தொடர்பாக தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலாளர் அமைச்சர் கீதாஜீவன் வெளியிட்ட அறிக்கை : தி.மு.க. மாநில இளைஞரணிச் செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. மற்றும் வடக்கு மாவட்ட, மாநகர விளையாட்டு மேம்பாட்டு அணி இணைந்து நடத்தும் மாவட்ட அளவிலான ஆண்கள் / பெண்கள் மின்னொளி கைப்பந்து போட்டி 08.12.2023 மாலை முதல் 10.12.2023 வரை தெர்மல் நகர் கைப்பந்து மைதானத்தில் வைத்து நடைபெற இருக்கிறது. போட்டிகளை தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமாகியகீதாஜீவன் ஆகிய நான் துவக்கி வைத்து வெற்றி பெறும் அணிக்கு பரிசுகள் வழங்க இருக்கிறேன்.
இந்நிகழ்ச்சியில் மாநகர மேயர் ஜெகன்பெரியசாமி, மாநகர செயலாளர் எஸ்.ஆர்.ஆனந்தசேகரன், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஜி.வி.மார்க்கண்டேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் ஏ.பாலகுருசுவாமி வரவேற்புரை வழங்குகிறார்.
மேலும் மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி துணை செயலாளர் நம்பிராஜன், மாநகர துணை மேயர் எஸ்.ஜெனிட்டா செல்வராஜ், பகுதி கழக செயலாளர்கள் டி.மேகநாதன், ஜி.ஜெயக்குமார், தொ.நிர்மல்ராஜ், எஸ்.சுரேஷ்குமார், டி.ஏ.ரவீந்திரன், பி.பி.இராமகிருஷ்ணன் ஆகியோர் சிறப்புரையாற்றுகிறார்கள். மாநகர விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் எம்.ஆரோக்கிய ராபின் அசோகன் நன்றியுரை ஆற்றுகிறார்.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெறும் ஆண்கள் அணிக்கு முதல் பரிசு ரூ.20,000, இரண்டாம் பரிசு ரூ.15,000, மூன்றாம் பரிசு ரூ.10,000, பெண்கள் அணிக்கு முதல் பரிசு ரூ.15,000, இரண்டாம் பரிசு ரூ.12,000, மூன்றாம் பரிசு ரூ.10,000/- மும் வழங்கப்படும்.
மேலும் இந்நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு அணி துணை அமைப்பாளர்களான எஸ்.குருராஜ், டி.மாதேஸ்வரன், கே.கணேசன், ஆர்.லவராஜா, ஆர்.டினோ மாநகர விளையாட்டு அணி துணை அமைப்பாளர்களான எஸ்.செல்வக்குமார், எம்.ராஜா, என்.அன்பழகன், ஜெ.பிரதீப், எல்.சில்வெஸ்டர் சாமுவேல், 60–வது வார்டு கழக நிர்வாகிகள் ஜி.ஆரோக்கியசாமி, எஸ்.சக்திவேல், கே.மூர்த்தி, சி.பெத்துராஜ், ஏ.அல்பர்ட் முத்துமாலை, வி.செல்வி, வி.எட்வர்ட்ஜான், வி.பாஸ்கரன், வீரபத்திரன், எம்.சுரேஷ், பி.மலைச்செல்வம் ஆகியோர் கொள்கிறார்கள்.
எனவே கழக நிர்வாகிகள், விளையாட்டு ஆர்வலா்கள், பொதுமக்கள் அனைவரும் இதனையே அழைப்பாக ஏற்று பெருந்திரளாக கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறேன்" என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி மாநகர் பகுதிகளில் 17ஆம் தேதி குடிநீர் விநியோகம் இருக்காது!
திங்கள் 15, டிசம்பர் 2025 5:40:10 PM (IST)

டிச.19ல் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் : மாவட்ட வருவாய் அலுவலர் தகவல்!
திங்கள் 15, டிசம்பர் 2025 5:24:42 PM (IST)

கார்த்திகை 5வது சோம வாரம்: தூத்துக்குடி சிவன் கோவிலில் 1008 சங்காபிஷேகம்
திங்கள் 15, டிசம்பர் 2025 5:06:23 PM (IST)

தூத்துக்குடியில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு!
திங்கள் 15, டிசம்பர் 2025 4:04:38 PM (IST)

தூத்துக்குடியில் மக்கள் குறை களையும் நாள் கூட்டம் : 387 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது
திங்கள் 15, டிசம்பர் 2025 3:43:10 PM (IST)

இந்திய கிரிக்கெட் அணியில் தூத்துக்குடி வீரர்கள் விளையாட வாய்ப்பு: டிஎன்சிஏ செயலர் பேச்சு
திங்கள் 15, டிசம்பர் 2025 3:32:52 PM (IST)










