» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
நூறு நாள் வேலை திட்டத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்: விஜய் வசந்த் எம்.பி.
புதன் 6, டிசம்பர் 2023 4:11:25 PM (IST)
நூறு நாள் வேலை திட்டத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என கன்னியாகுமரி தொகுதி எம்பி விஜய் வசந்த் வலியுறுத்தினார்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. விஜய்வசந்த் எம்.பி. பேசியதாவது, நூறு நாள் வேலை திட்டம் மூலம் இந்தியாவில் உள்ள கிராமப்புற பெண்கள் அதிக பயன்பெற்று வருகின்றனர். 2005-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்ட இந்த திட்டத்தின் மூலம் கிராமப்புற வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது. கிராமப்புற பொருளாதாரம் உயர்ந்தது.இந்த திட்டத்தில் நாடு முழுவதும் 16 கோடி தொழிலாளர்கள் பதிவு செய்துள்ளனர். அனைத்து தொழிலாளர்களுக்கும் இந்த திட்டத்தில் வேலை வழங்க வேண்டும் என்றால் ரூ.2 லட்சம் கோடிக்கு அதிகமாக நிதி ஒதுக்க வேண்டும். ஆனால் மத்திய அரசு 60 ஆயிரம் கோடி தான் நிதி ஒதுக்கி உள்ளது. இது, கடந்த ஆண்டை விட 21 சதவீதம் குறைவு ஆகும்.
நிதி குறைப்பால் கிராமப்புற பெண்களின் வாழ்வாதாரம் கேள்விக் குறியாகி உள்ளது. நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. இந்த நேரத்தில் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை நேரடியாக பாதிக்கும் இந்த திட்டத்தின் நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும். இந்த திட்டத்தின் கீழ் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு புதிய ஊதியத்தை நிர்ணயிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பெட்ரோல் குண்டுவீச்சில் காயம் அடைந்த மீனவர் : நிவாரணம் வழங்க கோரிக்கை!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:48:16 PM (IST)

காமராஜரை விமர்சனம் செய்த யூடியூபர் முக்தாரை கைது செய்ய கோரி ஆர்ப்பாட்டம்
திங்கள் 15, டிசம்பர் 2025 12:35:55 PM (IST)

அன்னை தெரேசா தொண்டு நிறுவன ஆண்டு விழா: சிறுவர் இல்லத்தில் புத்தாடைகள் வழங்கல்!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:29:46 PM (IST)

திருநங்கைகள் பெயரை பயன்படுத்தி மெகா ஊழல் : ஆட்சியர் அலுவலகத்தில் திருநங்கைகள் முற்றுகை!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:13:45 PM (IST)

சாணைக்கல்லில் சிந்து எழுத்துக்கள் கண்டெடுப்பு : பட்டினமருதூரில் தொல்பொருள் அதிசயம்!
திங்கள் 15, டிசம்பர் 2025 11:38:21 AM (IST)

தூத்துக்குடி சிவன் கோவிலில் மார்கழி மாதம் பூஜை நேரங்கள் மாற்றம்
திங்கள் 15, டிசம்பர் 2025 11:07:46 AM (IST)










