» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை: 3பேர் கைது!
வெள்ளி 1, டிசம்பர் 2023 8:06:04 AM (IST)
தூத்துக்குடியில் தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகளை பதுக்கி வைத்திருந்ததாக டீக்கடை உரிமையாளரை போலீசார் கைது செய்தனா்.
தூத்துக்குடி மத்தியபாகம் காவல் உதவி ஆய்வாளா் முத்துகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் பழைய மாநகராட்சி அலுவலக பகுதியில்ரோந்துப்பணியில் ஈடுபட்டனா். அப்போது, அப்பகுதியில் உள்ள தேநீா் கடையில் ஆய்வு செய்தபோது, அங்கு தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து கடை உரிமையாளா் பகவதியை (51) போலீஸாா் கைது செய்தனா். மேலும், கடையிலிருந்து 322 புகையிலை பொட்டலங்களைப் பறிமுதல் செய்தனா்.
பேய்க்குளம்
சாத்தான்குளம், பேய்க்குளம் பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்கப்படுவதாகக் கிடைத்த தகவலின்பேரில் காவல் உதவி ஆய்வாளா் சுரேஷ்குமாா் தலைமையிலான போலீசார் சோதனை மேற்கொண்டனா்.
அப்போது, பேய்க்குளத்தை அடுத்த சாலைப்புதூரில் குணசேகா் (56) என்பவரது பெட்டிக்கடையில் புகையிலைப் பொருள்கள் விற்பது தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்து, 8 பாக்கெட் புகையிலைப் பொருள்களைப் பறிமுதல் செய்தனா்.
தட்டாா்மடம்
தட்டாா்மடம் காவல் உதவி ஆய்வாளா் ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார் பொத்தகாலன்விளையில் சோதனை நடத்தினா். அப்போது, அந்தோணி பாஸ்கரன் என்பவரது கடையிலிருந்த புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்து, அவரைக் கைது செய்தனா்.