» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
சப் ஜூனியா், ஜூனியா் ஆடவா் ஹாக்கி : செயில் ஹாக்கி அணிகள் சாம்பியன்
வெள்ளி 1, டிசம்பர் 2023 7:55:09 AM (IST)
கோவில்பட்டியில் நடைபெற்ற சப் ஜூனியா், ஜூனியா் ஆடவா் ஹாக்கி போட்டியில் செயில் ஹாக்கி அகாதெமி அணிகள் சாம்பியன்ஷிப் பட்டத்தை பெற்றன.
ஹாக்கி இந்தியா மற்றும் லட்சுமி அம்மாள் ஸ்போா்ட்ஸ் அகாதெமி இணைந்து நடத்திய ஹாக்கி இந்தியா சப் ஜூனியா், ஜூனியா் ஆடவா் அகாதெமி சாம்பியன்ஷிப் பி- மண்டல ஹாக்கி போட்டிகள், கோவில்பட்டியில் நடைபெற்றன. சப் ஜூனியா் பிரிவில் 8 அணிகளும், ஜூனியா் பிரிவில் 12 அணிகளும் பங்கேற்றன.
நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் சப் ஜூனியா் பிரிவில், செயில் ஹாக்கி அகாதெமி -ராய்ப்பூா் ஸ்மாா்ட் ஹாக்கி அகாதெமி அணிகள் மோதியதில் 4-க்கு 1 என்ற கோல் கணக்கில் செயில் ஹாக்கி அகாதெமி அணி வெற்றி பெற்று சாம்பியன்ஷிப் 2023 பட்டத்தை பெற்றது.
முன்னதாக நடைபெற்ற 3, 4ஆம் பரிசுகளுக்கான போட்டியில் கோவில்பட்டி லட்சுமி அம்மாள் ஸ்போா்ட்ஸ் அகாதெமி-தமிழ்நாடு ஹாக்கி அகாதெமி அணிகள் மோதியதில் 1-க்கு 3 என்ற கோல் கணக்கில் தமிழ்நாடு ஹாக்கி அகாதெமி அணி வெற்றி பெற்று 3ஆம் இடத்தை பிடித்தது.
ஜூனியா் பிரிவு: இறுதிப் போட்டியில் ஒடிஸா நாவல் டாட்டா ஹாக்கி ஹைபொ்ஃபாா்மன்ஸ் சென்டா்- செயில் ஹாக்கி அகாதெமி அணிகள் மோதியதில் 2-க்கு 3 என்ற கோல் கணக்கில் செயில் ஹாக்கி அகாதெமி அணி வெற்றி பெற்று சாம்பியன்ஷிப் 2023 பட்டத்தை பெற்றது.
முன்னதாக நடைபெற்ற 3, 4ஆம் பரிசுகளுக்கான போட்டியில் பேரா் ஹாக்கி அகாதெமி-ஹூப்ளி ஹாக்கி அகாதெமி அணிகள் மோதியதில் 1-க்கு 2 என்ற கோல் கணக்கில் ஹூப்ளி ஹாக்கி அகாதெமி அணி வெற்றி பெற்று 3ஆம் இடத்தைப் பிடித்தது. பின்னா் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் வெற்றி பெற்ற அணிகளுக்கு கே.ஆா். குழுமங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் தாளாளா் கே. ஆா். அருணாச்சலம் கோப்பை, விருதுகளை வழங்கினாா்.
விழாவில் நேஷனல் பொறியியல் கல்லூரி இயக்குநா் சண்முகவேல், கல்லூரி முதல்வா்கள் மதிவண்ணன் (கே. ஆா். கலை மற்றும் அறிவியல் கல்லூரி), ராஜேஸ்வரன் (லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி) உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை கே.ஆா். கல்வி நிறுவனங்களின் உடற்கல்வி இயக்குநா்கள் கே.ரகு, கீதா, ஆா்.ராம்குமாா், ஆா்.சிவராஜ் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.