» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் பைக் திருடிய 2 பேர் கைது!

வியாழன் 30, நவம்பர் 2023 9:43:04 PM (IST)

தூத்துக்குடியில் இருசக்கர வாகனத்தை திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். 

தூத்துக்குடி கந்தன் காலனி பகுதியைச் சேர்ந்த பெரியசாமி மகன் லெட்சுமணன் (40) என்பவர் நேற்று இரவு அவரது வீட்டிற்குள் நிறுத்தியிருந்த இருசக்கர வாகனம் மற்றும் ரூபாய் 1500/- பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

இதுகுறித்து லெட்சுமணன் இன்று அளித்த புகாரின் பேரில் தென்பாகம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் தூத்துக்குடி மேலசண்முகபுரம் பகுதியைச் சேர்ந்த ராஜா மகன் சரவணன் (19) மற்றும் தூத்துக்குடி பி.என்.டி காலனி பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து மகன் புவனேஷ்குமார் (19) ஆகிய இருவரும் லெட்சுமணன் வீட்டுக்குள் நிறுத்தியிருந்த இருசக்கர வாகனம் மற்றும் பணத்தை திருடியது தெரியவந்தது.

இதனையடுத்து தென்பாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முகிலரசன் மற்றும் போலீசார் சரவணன் மற்றும் புவனேஷ்குமார் ஆகிய இருவரையும் கைது செய்து இருசக்கர வாகனம் மற்றும் பணம் ரூபாய் 1240/- ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்ட சரவணன் மீது ஏற்கனவே தென்பாகம் காவல் நிலையத்தில் திருட்டு வழக்குகள் உட்பட 13 வழக்குகளும், மத்தியபாகம் காவல் நிலையம் மற்றும் கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் தலா ஒரு வழக்கும் என மொத்தம் 15 வழக்குகளும், புவனேஷ்குமார் மீது தென்பாகம் காவல் நிலையத்தில் திருட்டு வழக்குகள் உட்பட 12 வழக்குகளும், சிப்காட் காவல் நிலையத்தில் ஒரு கொலை வழக்கும் தூத்துக்குடி வடபாகம் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும் என மொத்தம் 14 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

தூக்கமின்றி தவித்த இளைஞர் தற்கொலை!!!

வெள்ளி 23, பிப்ரவரி 2024 7:58:11 PM (IST)

Sponsored Ads


Arputham Hospital


Thoothukudi Business Directory