» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அகில இந்திய பெஞ்ச் பிரஸ் போட்டியில் பதக்கம் வென்று தூத்துக்குடி வீரர்கள் சாதனை

வியாழன் 30, நவம்பர் 2023 9:32:11 PM (IST)அகில இந்திய பெஞ்ச்பிரஸ் போட்டியில் தூத்துக்குடி வலுதூக்கும் வீரர்கள் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர். 

பவர் இந்தியா வலுதூக்கும் சங்கத்தின் சார்பில், கர்நாடக மாநிலம் பெங்களுருவில் நவம்பர் 22 முதல் 26 வரை நடைவெற்ற 28-வது அகில இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் பெஞ்ச்பிரஸ் போட்டியில், தமிழகத்தின் சார்பாக தூத்துக்குடியை சேர்ந்த சின்னதுரை மற்றும் முன்னாள் காவல்துறை உதவி ஆய்வாளர் குருமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு மாஸ்டர்ஸ் பிரிவில் தலா இரண்டு தங்கம் பதக்கங்கள் பெற்றதுடன் புதிய சாதனையும் படைத்துள்ளார்கள்.

மேலும், சுந்தர்ராஜன்  கலந்துகொண்டு ஒரு தங்கம், ஒரு வெள்ளி ஆகிய இரண்டு பதக்கங்கள் பெற்று தமிழ்நாட்டிற்க்கும் தூத்துக்குடி மாவட்டத்திற்கும் பெருமை சேர்ந்துள்ளார். வெற்றி பெற்ற வீரர்களை தூத்துக்குடி மாவட்ட வலுதூக்கும் சங்கம் சார்பாக தலைவர் அன்னை ஜீவல்லர்ஸ் பால்தங்கம் ராஜேஷ், செயலாளர் தமிழரசன், துனை செயலாளர்கள் வைரவேல், மகாலிங்கம் மற்றும் நிர்வாகிகள் சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

தூக்கமின்றி தவித்த இளைஞர் தற்கொலை!!!

வெள்ளி 23, பிப்ரவரி 2024 7:58:11 PM (IST)

Sponsored Ads
Arputham Hospital
Thoothukudi Business Directory