» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருச்செந்தூரில் மின்சாரம் தாக்கி பக்தர் பலி: கோவில் நிர்வாகம் அலட்சியம் - தந்தை புகார்!

வியாழன் 30, நவம்பர் 2023 5:38:16 PM (IST)



திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் கடற்கரை புறக்காவல் நிலையம் பகுதியில் உள்ள  மின் எர்த் பைப்பில் மின் கசிவு ஏற்பட்டதில் மின்சாரம் தாக்கி பக்தர் உயிரிழந்தார். 

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த ஜோதிபாஸ். இவரது குடும்பத்தினர் உறவினர்கள் என  7 பேர் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு  தரிசனம் செய்ய வந்துள்ளனர். இவர்கள் இன்று பகலில் கோயில் கடலில் புனித நீராடினர். கடலில் குளித்து முடித்து விட்டு ஜோதிபாஸ் மகன் பிரசாத் (22),  புறக்காவல் நிலையம் அருகே அமர்ந்துள்ளார். 

அப்போது புறக்காவல் நிலையம் சைடு பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மின் எர்த் பைப்பில் மின் கசிவு ஏற்பட்டுள்ளது. அப்போது எதிர்பாராமல் பிரசாத் மீது மின்சாரம் தாக்கியது.  அவரை காப்பாற்ற சென்ற தந்தை ஜோதிபாஸ் மீதும் லேசாக மின்சாரம் தாக்கியது. இதற்கிடையே அங்கிருந்து பக்தர்கள்  பிரசாத்தை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து  கோயில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோயில் நிர்வாகத்தின் அலட்சியத்தால் மின்சாரம் தாக்கி பக்தர் உயிரிழந்ததாக அவரது தந்தை ஜோதிபாசு குற்றம் சாட்டியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education

Arputham Hospital








Thoothukudi Business Directory