» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் மழை நீர் அகற்றும் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு

சனி 25, நவம்பர் 2023 11:02:19 AM (IST)தூத்துக்குடியில் பல்வேறு பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீர் அகற்றும் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டார். 

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் சமீபத்தில் பெய்த தொடர் மழையால் தாழ்வான பகுதிகள், குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனை மாநகராட்சி சார்பில் அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்றது வருகிறது. இந்நிலையில், மில்லர்புரம் ஹவுசிங் போர்டு, பிஎம்சி பள்ளி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வரும் மழைநீர் அகற்றும் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டார். 

அப்போது அவர் கூறுகையில், மழைநீர் அகற்றும் பணிகளானது இரவு பகலாக நடைபெற்று வருகின்றது. விரையில் முழுமையாக அகற்றப்படும் என்று தெரிவித்தார். ஆய்வின்போது, மாமன்ற உறுப்பினர் பொன்னப்பன், திமுக நிர்வாகிகள், மாநகராட்சி அதிகாரிகள், மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடன் சென்றனர். 


மக்கள் கருத்து

எல்லாம்Nov 26, 2023 - 01:00:10 PM | Posted IP 162.1*****

சும்மா விளம்பரம்

ராஜாNov 25, 2023 - 11:55:38 AM | Posted IP 172.7*****

Good Mayor

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham HospitalThoothukudi Business Directory