» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

காவல்துறையினரின் கவாத்து பயிற்சி: எஸ்பி பாலாஜி சரவணன் ஆய்வு!

சனி 25, நவம்பர் 2023 10:23:16 AM (IST)தூத்துக்குடி உட்கோட்ட காவல்துறையினரின் கவாத்து மற்றும் உடற்பயிற்சியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி உட்கோட்ட எல்லைக்குட்பட்ட காவல் நிலைய போலீசாரின் கவாத்து மற்றும் உடற்பயிற்சி இன்று காலை தூத்துக்குடி ரோச் பூங்கா முன்பாக நடைபெற்றது. இப்பயிற்சியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் நேரில் சென்று ஆய்வு செய்து, காவல்துறையினர் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து தகுந்த அறிவுரைகள் வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து போலீசாரின் குறைகளை கேட்டறிந்து அதற்கு நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். இந்நிகழ்வின் போது தூத்துக்குடி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சத்தியராஜ்  உடனிருந்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Arputham Hospital
Thoothukudi Business Directory