» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி புனித சவேரியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் துவங்கியது

சனி 25, நவம்பர் 2023 10:17:22 AM (IST)



தூத்துக்குடி டி.சவேரியார்புரம்  புனித சவேரியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் துவங்கியது.

தூத்துக்குடி டி.சவேரியார்புரம் புனித சவேரியார் ஆலய திருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. அருட்தந்தை அந்தோணி ஜெகதீசன்  தலைமை தாங்கி திருவிழா கொடியை ஏற்றி வைத்தார். முதல் நாள் திருவிழா கொடியேற்றமும் தொடா்ந்து நடைபெற்ற திருப்பலிக்கு தலைமை மறையுரையாற்றினாா். கீழவைப்பாா் பங்கு தந்தை அருட்தந்தை அந்தோணி ஜெகதீசன், தருவைக்குளம் பங்கு தந்தை வின்சென்ட் வெள்ளப்பட்டி பங்குதந்தை வினித்ராஜா ஜஸ்டின் மற்றும் மன்னின்மைந்தா்கள் அருட்தந்தையா்கள் கலந்து கொண்டனா். 

10 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் தினமும் காலை 6 மணிக்கு திருப்பலியும் மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை  மற்றும் நற்கருணை ஆசீர் நடைபெறும்.  விழாவின் சிறப்பு நிகழ்வான டிசம்பா் 1 வெள்ளிக்கிழமை 8 ஆம் திருவிழா மாலை நற்கருனை பவணி நடைபெறும். அருட்தந்தை ஜோ தலைமையில் மறையுரை நடைபெறும். 9ஆம் திருவிழா (டிச.2) மாலை வள்ளியூா் விஎம்எஸ்எஸ்எஸ் இயக்குனா் அருட்தந்தை ரெக்ஸ் அடிகளாா் தலைமையில் மறையுரை நடைபெறும். 

10ஆம் திருவிழா டிசம்பா் 3ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை துரைகுடியிருப்பு பங்குதந்தை அருட்தந்தை ஆலிபன் அடிகளாா், தென் மண்டல பள்ளிகளின் கண்காணிப்பாளா் அருட்தந்தை ஜோசப் ஸடாலின் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெறும். திருவிழா காலங்களில் காலை திருப்பலியும் மாலை நட்கருணை ஆசீா் நடைபெறும். விழாவிற்கான ஏற்பாடுகளை பங்குதந்தை குழந்தைராஜன் மற்றும் அருட்சகோதாிகள் ஊா்நிா்வாகிகள் பங்கு இறைமக்கள் செய்திருந்தனா்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory