» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
வாலிபர் கொலையில் சிறுவர்கள் உள்பட 3 பேர் கைது : பரபரப்பு தகவல்
சனி 25, நவம்பர் 2023 9:07:46 AM (IST)
கோவில்பட்டி அருகே வாலிபர் கொலையில் சிறுவர்கள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே ஆலம்பட்டி வடக்கு தெருவைச் சேர்ந்தவர் கனகராஜ். இவருடைய மகன் அருண் பாரதி (20). கூலி தொழிலாளியான இவரை நேற்று முன்தினம் பகலில் ஆலம்பட்டி கண்மாய் பகுதியில் மர்மநபர்கள் வெட்டிக்கொலை செய்தனர்.இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
கொலையாளிகளை பிடிப்பதற்காக, கோவில்பட்டி டிஎஸ்பி வெங்கடேஷ் மேற்பார்வையில், சப்-இன்ஸ்பெக்டர்கள் ஹரி கண்ணன், செந்தில்குமார், சரவணன் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைத்து வலைவீசி தேடினர். இந்நிலையில் அருண் பாரதி கொலை வழக்கு தொடர்பாக, கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்த 18 வயது வாலிபர் மற்றும் 17 வயதான 2 சிறுவர்கள் ஆகிய 3 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
கைதானவர்கள் போலீசாரிடம் அளித்த பரபரப்பு வாக்குமூலத்தில், எங்களுக்கும், அருண் பாரதிக்கும் இடையே முன்விரோதம் இருந்தது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு எங்களுடைய நண்பரை வெட்டிக் கொல்ல முயன்ற வழக்கில் அருண் பாரதி சம்பந்தப்பட்டு இருந்தார். எனவே அதற்கு பழிதீர்க்கும் விதமாக அருண் பாரதியை கொலை செய்ததாக தெரிவித்தனர்.
கைதான வாலிபர் மற்றும் 2 சிறுவர்களையும் போலீசார், கோவில்பட்டி 2-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். வாலிபரை சிறையில் அடைக்கவும், சிறுவர்களை கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்கவும் ஏற்பாடு செய்தனர்.
smallNov 26, 2023 - 04:04:01 AM | Posted IP 172.7*****