» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கிராம நிர்வாக அலுவலகத்திற்கு சொந்த கட்டிடம் இல்லாததால் பொதுமக்கள் அவதி!

சனி 25, நவம்பர் 2023 9:02:39 AM (IST)

தூத்துக்குடி பகுதி-1 கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திற்கு சொந்த கட்டிடம் இல்லாததால் முதியவர்கள்,மாற்றுத்திறனாளிகள் பொதுமக்கள் தங்களுக்கான சேவைகளை பெற பல கி.மீ அலைய வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இது குறித்து சமூக ஆர்வலரும்,தேசிய மக்கள் உரிமைகள் பாதுகாப்பு கழகத்தின் மாவட்ட செயலாளர் அ.செல்வகுமார் கூறியதாவது.. மையப்பகுதியில் அனைத்துதரப்பு மக்களும் எளிதில் வந்து செல்லும் வகையிலான இடத்தில் செயல்பட்ட சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலகத்தின் கட்டிடம் மிகவும் பழுதானதால் புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டி மாவட்ட நிர்வாகத்திற்கு நான்  மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை 

இறுதியில் வேறு வழியின்றி சம்பந்தப்பட்ட அலுவலகம் வாடகை கட்டிடத்திற்கு மாற்றப்பட்டது. தற்போது அவ்விடம் மையப்பகுதியில் அமையாததால் பொதுமக்கள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மிகுந்த சிரமத்தை எதிர்கொள்கின்றனர். தூத்துக்குடி மாநகராட்சி சென்மேரீஸ் காலனி பகுதியில் பஞ்சாயத்து அலுவலகமாக செயல்பட்ட இடம் தற்போது பயன்பாடின்றி உள்ளது. 

அதில் புதிய கிராம நிர்வாக அலுவலகம் கட்டினால் அனைத்துதரப்பு மக்களும் எளிதில் பயனடைய வழிவகை செய்யும் மாவட்ட நிர்வாகம் இம்முறையாவது அனைத்து தரப்பு மக்களும் பயனைடையும் வகையில் சம்பந்தப்பட்ட இடத்தில் புதிய அலுவலக கட்டிடம் கட்டித்தர வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory