» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
காவல் நிலையங்களில் பணிபுரியும் தகவல் பதிவு உதவியாளர்களுக்கு கணிணி வழங்கல்!
வெள்ளி 24, நவம்பர் 2023 8:38:02 PM (IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து காவல் நிலையங்களில் பணிபுரியும் தகவல் பதிவு உதவியாளர்/வரவேற்பாளர்களுக்கு எஸ்பி பாலாஜி சரவணன் கணிணி வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் பணியில் இருக்கும்போது மரமணமடைந்த காவல்துறை மற்றும் அமைச்சுப் பணி அலுவலர்களின் வாரிசுதார்களான 75 பேருக்கு கருணை அடிப்படையில் தகவல் பதிவு உதவியாளர்/வரவேற்பாளர்களாக தமிழ்நாடு அரசு பணி நியமனம் செய்து பயிற்சியளிக்கப்பட்டு அனைத்து காவல் நிலையங்களிலும் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
மேற்படி பயிற்சி பெற்ற வரவேற்பாளர்கள் காவல் நிலையத்திற்கு வரும் புகார்கள் மற்றும் புகார்தாரர் விபரங்கள் குறித்த தகவல்களை கணிணி மூலம் பதிவு செய்து தகுந்த நடவடிக்கை எடுப்பதற்கு உயரதிகாரிகளின் கவனத்திற்க கொண்டு செல்வதற்கு தமிழ்நாடு அரசு வழங்கிய கணிணிகளை தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் வழங்கி காவல் நிலையங்களுக்கு புகார் அளிக்க வரும் பொதுமக்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் என அறிவுரைகள் வழங்கினார்.