» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மூதாட்டியிடம் திரும்ப பெறப்பட்ட ரூ36 ஆயிரம் மீண்டும் வழங்கப்பட்டது!

வெள்ளி 24, நவம்பர் 2023 8:32:53 PM (IST)சாத்தான்குளம் மூதாட்டியிடமிருநது திரும்ப பெறப்பட்ட முதியோர் உதவித்தொகை ரூ 36 ஆயிரத்தை திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் குருசந்திரன் திரும்ப வழங்கினர். கனிமொழி எம்பியும், ஊர்வசி அமிர்தராஜ் எம்எல்ஏவும் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரைத்திருந்தனர். 

சாத்தான்குளம் காமராஜர் நகர் தெருவைச் சேர்ந்தவர் பேச்சிமுத்து மனைவி தங்கம்மாள் (வயது95). கணவர் பேச்சிமுத்து இறந்து போனதால் இவர் அவரது மூன்று மகன்களுடன் வசித்து வருகிறார். இதில் மூத்த மகன் ரவி, தையல் தொழிலாளியாக இருந்த நிலையில் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவராகவும், இரண்டாவது மகன் பாஸ்கர், மாற்றுத்திறனாளியாகவும், மூன்றாவது மகன் ராமன் மன சிதைவு நோய்க்கு உள்ளாகி பாதிக்கப்பட்டுள்ளார். இதில் மகன்கள் பாஸ்கர், ராமன் ஆகியோர் தமிழக அரசின் உதவித்தொகை பெற்று வருகின்றனர் . 

இந்நிலையில் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு தங்கம்மாள், முதியோர் உதவித்தொகை கேட்டு சாத்தான்குளம் சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியரிடம் அளித்த மனு ஏற்கப்பட்டு அவரது வங்கி கணக¢கில் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் வரவு வைக்கப்பட்டு வந்துள்ளது. ஆனால் உதவித்தொகை அளிக்கப்பட்டு வருவது சமுக பாதுகாப்பு திட்ட அதிகாரிகளிடமிருந்து தகவல் தெரிவிக்கப்படாததால் அவர்க்கு வங்கியில் வரவான முதியோர் உதவித்தொகை ரூஆயிரத்தை எடுக்காமல் இருந்துள்ளார்.

இந்நிலையில் உறவினர் ஒருவர் மூலம் அவரது வங்கி கணககு புத்தகத்தை வங்கியில் உள்ள இயந்திரத்தில் பதிவு செய்த போது அவருக்கு கடந்த ஏப்ரல் மாதம் வரை உதவித்தொகை வழங்கப்பட்டு அந்த பணத்தை இவர் எடுக்காததால் சமூக பாதுகாப்பு திட்டம் மூலம் மொத்தம் ரூ 36 ஆயிரம் திரும்ப எடுத்து கொண்டுள்ளது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வட்டாட்சியர் அலுவலகம், மற்றும் வங்கியில் முறையிட்டுள்ளார்.

திரும்ப பெறப்பட்ட உதவித்தொகையை மீண்டும் பணத்தை வழங்க வேண்டும் எனவும் முதியோர் உதவித் தொகையை மீண்டும் வழங்கிட நடவடிக்கை எடு்க்க வேண்டும் என சாத்தான்குளம் வட்டாட்சியர் , மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுககு மனு அனுப்பியுள்ளார். இதனையடுத்து தற்போது மூதாட்டிக்கு கலைஞர் உரிமைத்தொகை ரூ ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் மூதாட்டியிடம் இருந்து உதவித்தொகையை அரசு திரும்ப பெற்றுள்ளது குறித்து சமூக வலைதளங்களில் வைரலானது. இதனையறிந்த கனிமொழி எம்பி, ஊர்வசி எஸ். அமிர்தராஜ் எம்எம்ஏ ஆகியோர் பாதிக்கப்பட்ட மூதாட்டியிடம் தொலைபேசியில் ஆறுதல் கூறியதுடன், திரும்ப பெறப்பட்ட முதியோர் உதவித்தொகையை திரும்ப வழங்கிட வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கும் பரிந்துரைத்தனர். 

அதன்படி சாத்தான்குளம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு மூதாட்டி தங்கம்மாள் மற்றும் அவரது மகன்களை அழைத்து திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் குருசந்திரன், ரூ36 ஆயிரத்திற்கான காசோலையை மூதாட்டியிடம் வழங்கினார்.

அப்போது சாத்தான்குளம் வட்டாட்சியர் ரதிகலா, சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர் செந்தூர்ராஜன், பேரூராட்சி கவுன்சிலர் தேவனேசம், முன்னாள் கவுன்சிலர் எஸ்தர் ரஞ்சிதம், ஆசிரியை சந்திரா, வியாபாரிகள் சங்க செயலர் மதுரம் செல்வராஜ், துணைத் தலைவர் கண்ணன், நகர திமுக செயலர் மகா.இளங்கோ, சாத்தான்குளம் தேவி ஸ்ரீஅழகம்மன் கோயில் அறங்காவலர்குழு தலைவர் சரவணன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர். 

திரும்ப பெறப்பட்ட உதவித்தொகையை பெற்ற மூதாட்டி தங்கம்மாள், அதிகாரிகளுக்கும், உதவி தொகை பெற உதவிய சமூக ஆர்வலர்களுக்கு நன்றி தெரிவித்தார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham HospitalThoothukudi Business Directory