» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பாம்பு கடித்த முதியவருக்கு விஷமுறிவு சிகிச்சை!

வெள்ளி 24, நவம்பர் 2023 8:13:12 PM (IST)



புதுக்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பாம்பு கடித்த முதியவருக்கு விஷமுறிவு மருந்தின் மூலம் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம் மேல கூட்டுடன்காடு கிராமத்தை சார்ந்த 64 வயதுடைய முத்துராஜன் என்பவருக்கு பாம்பு கடித்தது.  பாம்பு கடித்த நபரை உடனடியாக அருகிலுள்ள புதுக்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். 

உடனடியாக வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர்.ஹேமலதா தலைமையில், டாக்டர்.வினோதினி ஆகியோர் பாம்பு கடி நபருக்கு விஷம் முறிவு மருந்து (Anti SnakeVenom - ASV) கொடுத்து முதலுதவி சிகிச்சை மேற்கொண்டு மேல் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிகழ்வின் போது தூத்துக்குடி சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் டாக்டர்.பொற்செல்வன் புதுக்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.  அப்போது அங்குள்ள பொதுமக்களிடம் பேசுகையில், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் பாம்பு கடிக்கான முதலுதவி சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது பொதுமக்கள் இதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory