» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
புதூரில் வாக்காளர் சிறப்பு முகாம் விழிப்புணர்வு பேரணி: மாணவ, மாணவியர் பங்கேற்பு
வெள்ளி 24, நவம்பர் 2023 8:08:41 PM (IST)
விளாத்திகுளம் அருகே புதூரில் மாணவ, மாணவியர்கள் வாக்காளர் சிறப்பு முகாம் விழிப்புணர்வு பேரணி மேற்கொண்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர்கள் பள்ளி வளாகத்தில் இருந்து புதூர் பேரூராட்சி வளாகம் வரை சிறப்பு சுருக்கம் முறை திருத்தம் 25. 11. 2023 மற்றும் 26. 11. 2023 ஆகிய தேதிகளில் நடைபெறும் சிறப்பு முகாம்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் மற்றும் இளம் வாக்காளர்களை வாக்காளர் பட்டியல் சேர்ப்பதற்கு உண்டான விழிப்புணர்வு ஏற்படுத்துதல் ஆகியவற்றை கோஷங்களாக எழுப்பி கொண்டு தேர்தல் விழிப்புணர்வு பேரணியாக நடை பயணம் மேற்கொண்டனர்.
இந்த வாக்காளர் சிறப்பு முகாம் விழிப்புணர்வு பேரணிக்கு விளாத்திகுளம் வட்டாட்சியர் ராமகிருஷ்ணன் மற்றும் தேர்தல் துணை வட்டாட்சியர் பாலமுருகன் தலைமை வகித்தனர், தலைமை ஆசிரியை அன்னைஷீபாபிளவர் லெட், வருவாய் ஆய்வாளர் அனிதா, கிராம நிர்வாக அலுவலர் யுவராம், மற்றும் ஆசிரியர் ஆசிரியைகள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.