» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் நாளை காய்ச்சல் மருத்துவ முகாம்: ஆட்சியர் லட்சுமிபதி தகவல்

வெள்ளி 24, நவம்பர் 2023 5:50:34 PM (IST)

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் காயல்பட்டிணம், திருச்செந்தூர், கோவில்பட்டி நகராட்சி உள்ளிட்ட பகுதிகளில் நாளை (நவ.25) சிறப்பு காய்ச்சல் மருத்துவ முகாம்கள் நடைபெறுகிறது.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி வெளியிட்ட செய்திக்குறிப்பில், "தூத்துக்குடி மாவட்டத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மூலம் நடைபெறும் சிறப்பு காய்ச்சல் முகாம் மாவட்டத்தில் உள்ள தூத்துக்குடி மாநகராட்சி, காயல்பட்டிணம், திருச்செந்தூர் மற்றும் கோவில்பட்டி நகராட்சி பகுதிகள் மற்றும் 12 வட்டாரங்களில் சிறப்பு காய்ச்சல் மருத்துவ முகாம்கள் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் நடைபெறுகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் 12 வட்டாரங்கள், தூத்துக்குடி மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் டெங்கு கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள் (DBCs) வீடுதோறும் சென்று கொசுப்புழு ஒழப்பு பணி மற்றும் காய்ச்சல் உள்ளவர்களை கண்டறிந்து உடனடியாக அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை எடுத்துக்கொள்ள அறிவுறுத்தி வருகின்றனர். 

மேலும் முகாம் நடக்கும் இடங்களில் காய்ச்சல் மற்றும் சளி இருமல் போன்ற அறிகுறிகள் உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் முகாமில் இரத்த பரிசோதனைகள் செய்யப்பட்டு தகுந்த சிகிச்சை வழங்கப்படுகிறது. மேற்கண்ட அறிகுறிகுள் உள்ளவர்கள் கீழ்கண்ட இடங்களில் 25.11.2023 சனிக்கிழமை அன்று நடைபெறும் முகாம்களில் கலந்து கொண்டு பயன்பெறும்படி மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி,இ.ஆ.ப, கேட்டுக்கொண்டுள்ளார்.

முகாம் நடைபெறும் இடங்கள்

1. தூத்துக்குடி: வடக்கு காலாங்கரை, பெரியநாயகிபுரம், தாளமுத்துநகர், மறவன்மடம்

2. திருசெந்தூர்: வக்கீல்பிள்ளைவிளை, ராணிமகாராஐபுரம், சண்முகபுரம்

3. சாத்தான்குளம்: கந்தசாமிபுரம், சுப்பராயபுரம், பொத்தகாலன்விளை, தாய்விளை, வள்ளிவிளை, பெரியதாழை, எல்லுவிளை

4. திருவைகுண்டம்: அகரம், நட்டாத்தி, பண்ணைவிளை

5. கருங்குளம்: சிங்கத்தாகுறிச்சி, வடக்கு காரசேரி, மணக்கரை, நாட்;டார்குளம், சேரகுளம், ராமானுஐம்புதூர்

6. உடன்குடி: ஏள்ளுவிளை, கரிசன்விளை, தேரியூர், பெருமாள்புரம், கருங்காளியம்மன் கோவில் தெரு, முத்தாரம்மன் கோவில் தெரு

7. ஆழ்வார்திருநகரி: சேந்தமங்கலம், குச்சிக்காடு, குருகாட்டூர், கோட்டூர், மணிநகர், திருவள்ளுவர் காலனி

8. கடம்பூர்: வெங்கடேஸ்வரபுரம், குருமலை, கழுகாசலபுரம்

9. கோவில்பட்டி: சத்திரம்பட்டி, விஸ்வதாஸ் நகர், திட்டங்குளம்

10. புதூர்: மேலகல்லூரணி, கீழகல்லுரணி, கோவில் குமாரரெட்டியாபுரம்

11. ஓட்டபிடாரம்: கொடியன்குளம், புளியம்பட்டி, ஓட்டுடன்பட்டி

12. விளாத்திகுளம்: கோடாங்;கிபட்டி, மகாராஐபுரம், கருத்தையாபுரம்

13. கோவில்பட்டி நகராட்சி: சங்கரலிங்கபுரம், பாரதிநகர்

14. காயல்பட்டிணம் நகராட்சி. ரத்னாபுரி, அழகாபுரி

15. திருசெந்தூர் நகராட்சி: வன்னான்திரைவிளை

16. தூத்துக்குடி மாநகராட்சி: போல்போட்டை, நோதாஐpநகர், அய்யர்விளை, தஸ்நேவிஸ்நகர், லூர்தம்மாள்புரம், சக்திவிநாயகபுரம், பூபால்ராயர்புரம், அந்தோணியார்புரம், முருகேசன்நகர், 3ம் மைல்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham HospitalThoothukudi Business Directory