» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூய்மை பணியாளர்களுக்கு குறைந்த பட்ச ஊதியம் வழங்க வேண்டும்: சிஐடியூ கோரிக்கை
திங்கள் 20, நவம்பர் 2023 4:55:52 PM (IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் தூய்மை பணியாளர்கள் மற்றும் ஓட்டுநர்களுக்கு குறைந்த பட்ச ஊதியம் வழங்க வேண்டும் என உள்ளாட்சி ஊழியர் சங்கம் சிஐடியூ கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக சங்கத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியருக்கு விடுத்துள்ள கோரிக்கை மனு: தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி மாநகராட்சி காயல்பட்டினம் திருச்செந்தூர் கோவில்பட்டி ஆகிய நகராட்சிகளும் 18 பேரூராட்சிகளும் 43 கிராம பஞ்சாயத்தும் உள்ளது
இந்த உள்ளாட்துறையில்தூய்மை பணியாளர்கள் ஓட்டுநர்கள் OHT ஆப்ரேட்டர்கள் தூய்மை காவலர்கள் டெங்கு ஒழிப்பு பணியாளர்கள் மேற்பார்வையாளர்கள் உள்ளிட்ட தொழிலாளர்கள் தினக்கூலி மற்றும் ஒப்பந்த தொழிலாளர்களாக பணியாற்றி வருகிறார்கள் இவர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக 2017 அக்டோபர் 17ஆம் தேதி தமிழ்நாடு அரசால் 2D(63)அரசாணை வெளியிடப்பட்டது
இந்த அரசாணை படி ஊதியம் வழங்கப்படவில்லை. எங்கள் சங்கம் தொழிலாளர்கள் சார்பில் தொடர்ந்து மேற்கண்ட அரசாணைப்படி ஊதிய வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம் தற்போது சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவுபடி யும் தமிழ்நாடு அரசாணை2D (63) படிம் மேற்கண்ட பணியாளர்களுக்கு ஊதியம் மற்றும் அகவிலைப்படியும் சேர்த்து வழங்கிட உரிய நடவடிக்கை மேற்கொள்ள தமிழ்நாடு நகராட்சி நிர்வாக இயக்குனர் உறுதியளித்துள்ளார்.
மாநகராட்சியில் ஒப்பந்த பணியாளர்களுக்கு ஒருநாள் ஊதியமாக தூய்மை பணியாளர்களுக்கு ரூ725/
குடிநீர் பணியாளர்களுக்கு ரூ763/ ஓட்டுனர்களுக்கு ரூ 763/ டெங்கு ஒழிப்பு பணியாளர்களுக்கு ரூ725/
நகராட்சியில் ஒப்பந்த பணியாளர்களுக்கு ஒருநாள் ஊதியமாக தூய்மை பணியாளர்களுக்கு ரூ610/
குடிநீர் பணியாளர்களுக்கு ரூ/687 ஓட்டுனர்களுக்கு ரூ 687/ டெங்கு ஒழிப்பு பணியாளர்களுக்கு ரூ610/
பேரூராட்சியில் ஒப்பந்த பணியாளர்களுக்கு ஒருநாள் ஊதியமாக தூய்மை பணியாளர்களுக்கு ரூ533/
குடிநீர் பணியாளர்களுக்கு ரூ610/ ஓட்டுனர்களுக்கு ரூ 610/ டெங்கு ஒழிப்பு பணியாளர்களுக்கு ரூ533/
கிராம ஊராட்சியில் மாத ஊதியமாக தூய்மை பணியாளர்களுக்கு ரூ11848/
OHT ஆப்ரேட்டர்களுக்கு ரூ13848/ வழங்கிடவும்
மேற்கண்ட ஒப்பந்த பணியாளர்களுக்கு பிரதி மாதம் 5ம் தேதிக்குள் சம்பளம் வழங்கிடவும் பணியாளர்களிடம் பிடித்தம் செய்யவேண்டிய EPF&ESI பங்குத் தொகையை பிடித்தம் செய்து ஒப்பந்ததாரரின் பங்குத் தொகையுடன் சேர்த்து உரிய கணக்கில் செலுத்தவும் அதற்கான ரசீது தொழிலாளர்களுக்கு வழங்கிடவும் பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் முறையாக வழங்கிடவும் மருத்துவ பரிசோதனை உரிய காலத்தில் செய்திடவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சென்னை மக்கள் நலம் பெற தூத்துக்குடியில் வேள்வி பூஜை!
ஞாயிறு 10, டிசம்பர் 2023 6:17:19 PM (IST)

ஆலமரத்தை வெட்டி கடத்திய மர்ம நபர்கள் - விசாரணை நடத்த கோரிக்கை!
ஞாயிறு 10, டிசம்பர் 2023 6:14:09 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் காவலர் எழுத்து தேர்வு : 8 மையங்களில் நடைபெற்றது
ஞாயிறு 10, டிசம்பர் 2023 12:40:27 PM (IST)

பைக் மீது லாரி மோதி வாலிபர் சாவு: டிரைவர் கைது!
ஞாயிறு 10, டிசம்பர் 2023 12:37:30 PM (IST)

தொடர் மழை: தாமிரபரணி கரையோர பகுதி மக்களுக்கு எச்சரிக்கை
ஞாயிறு 10, டிசம்பர் 2023 12:34:43 PM (IST)

நாசரேத் தூய யோவான் பெண்கள் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா
ஞாயிறு 10, டிசம்பர் 2023 11:15:23 AM (IST)
