» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் தொடர் மழை: மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு!

திங்கள் 20, நவம்பர் 2023 7:55:11 AM (IST)



தூத்துக்குடியில் பெய்த தொடர் மழையால் மரக்கிளை முறிந்து மின் கம்பத்தில் விழுந்தது. 

தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இலங்கை கடல் பகுதியில் நீடித்த வழிமண்டல கீழடுக்கு சுழற்சியானது மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டியுள்ள குமரி கடல் பகுதிக்கு நகருகிறது. இக்காற்று சுழற்சி காரணமாக தூத்துக்குடி திருச்செந்தூர், காயல்பட்டினம், குலசேகரன்பட்டினம், சாத்தான்குளம் ஆகிய பகுதிகளில் மிக அதிகமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. 

அதன்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று அதிகாலை முதல் இரவு வரை தொடர் மழை பெய்தது.  தூத்துக்குடி மாநகராட்சி  மேல ரத வீதியில் உள்ள பள்ளியின் எதிர்புறம் மரம் ஒன்று மழை காரணமாக முறிந்து மின் வயர்களின் மீது விழுந்ததாக பகுதி கழக செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ்குமார் அளித்த தகவலை தொடர்ந்து அதனை உடனடியாக அப்புறப்படுத்த மேயர் ஜெகன் பெரியசாமி அதிகாரிகளிடம் கூறினார். மேலும் வெற்றிவேல்புரத்தில் உள்ள மழை நீர் வடிகாலையும் பார்வையிட்டார். 

வட்ட செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடன் சென்றனர். தூத்துக்குடியில் 8.3 மி.மீ., குலசேகரப்பட்டணம் 15மி.மீ., சாத்தான்குளம் 20.8 மி.மீ., திருச்செந்தூர், காயல்பட்டிணம் 33 மி.மீ., என மழை பதிவாகியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory