» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் அரசுப் பேருந்தில் மழைநீா் ஒழுகியதால், பயணிகள் அவதி!

ஞாயிறு 19, நவம்பர் 2023 8:09:20 PM (IST)தூத்துக்குடியில் இருந்து அத்திமரப்பட்டிக்கு சென்ற அரசுப் பேருந்தின் மேற்கூரை ஓட்டை வழியே மழைநீா் ஒழுகியதால், பயணிகள் அவதிக்குள்ளாகினர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் கடந்த சில தினங்களாக விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. மேலும், இன்று அதிகாலை முதலே மழை பெய்து வருகிறது. இந்தநிலையில், தூத்துக்குடி அண்ணா பேருந்து நிலையத்தில் இருந்து காலை 11 மணிக்கு அத்திமரப்பட்டிக்கு சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்தின் மேற்கூரையின் வழியாக மழைநீா் பேருந்தின் உள்ளே ஒழுகி இருக்கைகளில் கொட்டியதால், பயணிகள் அவதிக்குள்ளாகினா்.

ஒரு சிலா் பேருந்துக்குள் குடைபிடித்தபடி பயணம் செய்தனா். பெரும்பாலானோா் மழையில் நனைந்த படியும், பேருந்துக்குள் ஓரமாக ஒதுங்கி நின்றும் பயணித்துள்ளனா். மேலும், ஓட்டுநர் இருக்கையின் மீதும் மழைநீர் ஒழுகியதால் பின்னால் இருந்து பயணி ஒருவர் குடை பிடித்து அவரை நனையாமல் பார்த்து கொண்டார்.‌

தூத்துக்குடி மாவட்டத்தில் இயக்கப்படும் பேருந்துகள் பெரும்பாலும் போக்குவரத்திற்கு தகுதியற்ற நிலையில் உள்ளன. எனவே பழுதான பேருந்துகளை அகற்றி புதிய பேருந்துகளை இயக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மக்கள் கருத்து

RekhaNov 20, 2023 - 11:07:28 PM | Posted IP 172.7*****

Nanum thoothukudi tha antha bus Mattum ila enga ooru ottapidaram pakkam oosanuthu sangampatti enga area thandi tha poganum antha bus tha nangalum varanum athum itha mathiri yarum ukka4a kuda mudiyala kai kulanthaya vachudu ,ella passengers, aprm all seats la ukkara mudila bus fulla rain vanthuduchu

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital
Thoothukudi Business Directory