» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
திருச்செந்தூர் கடற்கரையில் சூரசம்ஹாரம் : பல லட்சம் பக்தர்கள் தரிசனம்
சனி 18, நவம்பர் 2023 8:26:53 PM (IST)

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹார நிகழ்ச்சியை லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 13-ந்தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. அன்று முதல் கோவிலில் பக்தர்கள் விரதம் இருக்க தொடங்கினர். விழா நாட்களில் தினமும் அதிகாலை நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம், ஜெயந்திநாதர் யாகசாலை புறப்பாடு, மூலவர், சண்முகருக்கு உச்சிகால பூஜைக்கு பின்னர், யாக சாலையில் உள்ள சுவாமி ஜெயந்திநாதருக்கு தீபாராதனை, பின்னர் தங்கச்சப்பரத்தில் சுவாமி எழுந்தருளல், மாலையில் ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானையுடன் திருவாவடுதுறை ஆதினம் கந்தசஷ்டி மண்டபத்துக்கு எழுந்தருளினார்.
கந்த சஷ்டி விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று மாலை நடைபெற்றது. இதையொட்டி இன்று அதிகாலை 1 மணிக்கு கோவில் நடைதிறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், 9 மணிக்கு உச்சிக்கால அபிஷேகமும் நடந்தது. மதியம் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடைபெற்றது.
தொடர்ந்து, மாலை 4 மணிக்கு மேல், சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக, சுவாமி ஜெயந்திநாதர் சூரசம்ஹாரத்துக்கு கடற்கரையில் எழுந்தருளினார். அங்கு, முதலாவதாக யானை முகம் கொண்ட தாரகாசுரனை சுவாமி ஜெயந்திநாதர் வதம் செய்தார். தொடர்ந்து, சுவாமி ஜெயந்திநாதருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட வேலில், இரண்டாவதாக சிங்க முகம் கொண்ட சிங்கமுகாசுரனை வதம் செய்தார்.தொடர்ந்து, தலையை ஆட்டியபடி முருகனுடன் போரிட வந்தான் சூரபத்மன். பின்னர் தன்முகத்தோடு எழுந்தருளிய சூரபத்மனை வதம் செய்தார் சுவாமி ஜெயந்திநாதர்.

மாமரமாகவும், சேவலாகவும் மாறி முருகனுடன் போரிட வந்தான் சூரபத்மன். சூரனை சம்ஹாரம் செய்து சேவற்கொடியாகவும், மயிலாகவும் ஜெயந்திநாதர் ஆட்கொண்டார். சூரசம்ஹார நிகழ்ச்சியை லட்சக்கணக்கான பக்தர்கள் காணும் வகையில் 6 இடங்களில் கோவில் நிர்வாகம் சார்பில் எல்.இ.டி. டி.வி.க்கள் அமைக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன் தலைமையில் தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சென்னை மக்கள் நலம் பெற தூத்துக்குடியில் வேள்வி பூஜை!
ஞாயிறு 10, டிசம்பர் 2023 6:17:19 PM (IST)

ஆலமரத்தை வெட்டி கடத்திய மர்ம நபர்கள் - விசாரணை நடத்த கோரிக்கை!
ஞாயிறு 10, டிசம்பர் 2023 6:14:09 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் காவலர் எழுத்து தேர்வு : 8 மையங்களில் நடைபெற்றது
ஞாயிறு 10, டிசம்பர் 2023 12:40:27 PM (IST)

பைக் மீது லாரி மோதி வாலிபர் சாவு: டிரைவர் கைது!
ஞாயிறு 10, டிசம்பர் 2023 12:37:30 PM (IST)

தொடர் மழை: தாமிரபரணி கரையோர பகுதி மக்களுக்கு எச்சரிக்கை
ஞாயிறு 10, டிசம்பர் 2023 12:34:43 PM (IST)

நாசரேத் தூய யோவான் பெண்கள் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா
ஞாயிறு 10, டிசம்பர் 2023 11:15:23 AM (IST)

JAI RAMNov 19, 2023 - 12:16:07 PM | Posted IP 172.7*****