» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சிவன் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாணத் திருவிழா தேரோட்டம் : தூத்துக்குடியில் கோலாகலம்! !

செவ்வாய் 7, நவம்பர் 2023 11:27:27 AM (IST)



தூத்துக்குடியில் சிவன் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா தேரோட்டம் வெகு விமரிசையாக நடந்தது. இதில் திரளான பக்தர்கள் தேர் வடம் பிடித்தனர். 

தூத்துக்குடி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள சிவன் கோவில் என்று அழைக்கப்படும் பாகம்பிரியால் உடனுறை சங்கரராமேஸ்வரர் கோயில் உள்ளது. இக் கோயில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா ஆண்டு தோறும் வெகு விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா அக்.30ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து தினமும் காலை மாலையில் சிறப்பு பூஜைகள், சுவாமி, அம்பாள் சப்பர வீதி உலா நடைபெற்றன.


விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை நடந்தது. காலை 7 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாரதனை நடந்தது. காலை 10.30 மணிக்கு அம்மன் சிறப்பு அலங்காரத்துடன் தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து தேரோட்டத்தை தமிழக  சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதாஜீவன், மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமிபதி, இந்த சமய அறநிலைத்துறை இணை ஆணையர் அன்புமணி சிவன் கோவில் அறங்கால குழு தலைவர் கந்தசாமி, ஸ்ரீ வைகுண்டபதி திருக்கோவில் அறங்காவலர் குழு தலைவர் ஏ. சி.செந்தில் குமார் ஆகியோர் வடம் பிடித்து இழுத்து துவக்கிவைத்தனர். 

அதனை  தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர். தேரோட்டத்தை முன்னிட்டு தேருக்கு முன்பாக சிவன், பார்வதி, கணபதி, முருகன் ஆகிய வேடமணிந்து சிறுவர், சிறுமியர் நடனமாடினர். ஒயிலாட்டம், களியல் ஆட்டம், மயிலாட்டம், குதிரை ஆட்டம், ராஜ மேளம், செண்டை மேளம், நையாண்டி மேளம், உருமி மேளம், சிவபூதனை வாத்தியங்களுடன் தேவார இன்னிசையுடன் சிலம்பாட்டம் ஆடியபடியே சென்றனர். 


தேரோட்டம் நிகழ்ச்சியில் அறங்காவலர்கள் பி.எஸ்.கே ஆறுமுகம்,சந்தி, சிவன் கோவில் செயல் அலுவலர் தமிழ்ச்செல்வி உள்ளிட்ட உட்பட பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். வருகிற 9ஆம் தேதி திருக்கல்யான வைபம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



New Shape Tailors


Arputham Hospital





Thoothukudi Business Directory