» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் பிரதான சாலையில் மழைநீர் தேங்கி அவலம்: மாணவ, மாணவிகள் கடும் அவதி!
திங்கள் 6, நவம்பர் 2023 11:21:10 AM (IST)

தூத்துக்குடியில் பிரதான சாலையில் மழைநீர் தேங்கி நிற்பதால் பள்ளி மாணவ, மாணவியர் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
தூத்துக்குடியில் பெருமாள் புரம் மெயின் ரோட்டில் நீதிபதி குடியிருப்பு எதிரே உள்ள பிரதான சாலையில் சிறிய மழை பெய்தாலே மழை நீர் தேங்கி நிற்கிறது. மேலும் அந்த சாலை உடைந்து குண்டும் குழியுமாக உள்ளதால் அவ்வழிய செல்லும் வாகன ஓட்டிகள் மழை நீரில் விழுந்து விபத்துக்குள்ளாகி வருகின்றனர். இந்த பகுதியில் சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல் நிலை பள்ளி, பாரதியார் வித்யாலயம், ஹோலி கிராஸ் மற்றும் மருத்துவமனைகள் உள்ளது.
தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த பாதையை கடந்து செல்கின்றனர். சிறிய மழை பெய்தாலும் மழை நீர் தேங்குகிறது. அருகில் மழைநீர் வடிகால் இருந்தும் அதில் மழைநீர் செல்லாமல் சாலையில மழைநீர் தேங்கி நிற்கிறது. இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் பல முறை முறையிட்டும் மாநகராட்சி அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. எனவே, மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி இந்த சாலையை உடனடியாக சீரமைக்க போர்க்கால அடிப்படையில் மேயர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சென்னை மக்கள் நலம் பெற தூத்துக்குடியில் வேள்வி பூஜை!
ஞாயிறு 10, டிசம்பர் 2023 6:17:19 PM (IST)

ஆலமரத்தை வெட்டி கடத்திய மர்ம நபர்கள் - விசாரணை நடத்த கோரிக்கை!
ஞாயிறு 10, டிசம்பர் 2023 6:14:09 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் காவலர் எழுத்து தேர்வு : 8 மையங்களில் நடைபெற்றது
ஞாயிறு 10, டிசம்பர் 2023 12:40:27 PM (IST)

பைக் மீது லாரி மோதி வாலிபர் சாவு: டிரைவர் கைது!
ஞாயிறு 10, டிசம்பர் 2023 12:37:30 PM (IST)

தொடர் மழை: தாமிரபரணி கரையோர பகுதி மக்களுக்கு எச்சரிக்கை
ஞாயிறு 10, டிசம்பர் 2023 12:34:43 PM (IST)

நாசரேத் தூய யோவான் பெண்கள் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா
ஞாயிறு 10, டிசம்பர் 2023 11:15:23 AM (IST)
