» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் காவல் நிலையத்தில் 3 பைக் திருட்டு : வாலிபர் கைது!
செவ்வாய் 3, அக்டோபர் 2023 11:12:06 AM (IST)
தூத்துக்குடியில் காவல் நிலையத்தில் 3 பைக்குகள் திருடுபோனது தொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி தாளமுத்துநகர் காவல் நிலைய வளாகத்தில் பல்வேறு வழக்குகளில் போலீசார் பறிமுதல் செய்த பைக்குகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அங்கிருந்த 3 பைக்குகள் கடந்த 1ம் தேதி இரவு திருடுபோய்விட்டது. இதன் மதிப்பு ரூ.2.5 லடசம் ஆகும்.
இதுகுறித்து தலைமைக் காவலர் முரளி அளித்த புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தியதில், தாளமுத்துநகர் சுனாமி காலனியைச் சேர்ந்த முருகேசன் மகன் மகன் ஆறுமுகம் (19) உள்பட 4பேர் பைக்குகளை திருடியது தெரியவந்தது. இதையடுத்து ஆறுமுகத்தை போலீசார் கைது செய்து 3 பைக்குகளை பறிமுதல் செய்தனர். மேலும் 3பேரை தேடி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பெட்ரோல் குண்டுவீச்சில் காயம் அடைந்த மீனவர் : நிவாரணம் வழங்க கோரிக்கை!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:48:16 PM (IST)

காமராஜரை விமர்சனம் செய்த யூடியூபர் முக்தாரை கைது செய்ய கோரி ஆர்ப்பாட்டம்
திங்கள் 15, டிசம்பர் 2025 12:35:55 PM (IST)

அன்னை தெரேசா தொண்டு நிறுவன ஆண்டு விழா: சிறுவர் இல்லத்தில் புத்தாடைகள் வழங்கல்!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:29:46 PM (IST)

திருநங்கைகள் பெயரை பயன்படுத்தி மெகா ஊழல் : ஆட்சியர் அலுவலகத்தில் திருநங்கைகள் முற்றுகை!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:13:45 PM (IST)

சாணைக்கல்லில் சிந்து எழுத்துக்கள் கண்டெடுப்பு : பட்டினமருதூரில் தொல்பொருள் அதிசயம்!
திங்கள் 15, டிசம்பர் 2025 11:38:21 AM (IST)

தூத்துக்குடி சிவன் கோவிலில் மார்கழி மாதம் பூஜை நேரங்கள் மாற்றம்
திங்கள் 15, டிசம்பர் 2025 11:07:46 AM (IST)










