» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பழுதடைந்த சாலையை சீரமைக்கக்கோரி த.மா.கா.வினர் ஆர்ப்பாட்டம்
செவ்வாய் 3, அக்டோபர் 2023 8:08:47 AM (IST)
கோவில்பட்டியில் பழுதடைந்த சாலையை சீரமைக்கக்கோரி த.மா.கா.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள கோட்டாட்சியர் அலுவலகம், நீதிமன்ற வளாகம் மற்றும் தாசில்தார் அலுவலகம் உள்ளிட்ட அலுவலகங்களுக்கு செல்லக்கூடிய சாலை மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது. இதுதொடர்பாக பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்தும், பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், காந்தி ஜெயந்தி நாளில் அந்த சாலையில் வாழை மரம் நடும் போராட்டத்திற்கு த.மா.கா.வினர் ஏற்பாடு செய்தனர்.
இதற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்திருந்த நிலையில் தடையை மீறி போராட்டம் நடத்துவதற்காக த.மா.கா. நகர தலைவர் ராஜகோபால் உள்ளிட்டோர் கையில் வாழை மரக்கன்றுடன் வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி வாழை மரக்கன்றை பறிமுதல் செய்தனர். இதையடுத்து அவர்கள் தாலுகா அலுவலக வாயில் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சென்னை மக்கள் நலம் பெற தூத்துக்குடியில் வேள்வி பூஜை!
ஞாயிறு 10, டிசம்பர் 2023 6:17:19 PM (IST)

ஆலமரத்தை வெட்டி கடத்திய மர்ம நபர்கள் - விசாரணை நடத்த கோரிக்கை!
ஞாயிறு 10, டிசம்பர் 2023 6:14:09 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் காவலர் எழுத்து தேர்வு : 8 மையங்களில் நடைபெற்றது
ஞாயிறு 10, டிசம்பர் 2023 12:40:27 PM (IST)

பைக் மீது லாரி மோதி வாலிபர் சாவு: டிரைவர் கைது!
ஞாயிறு 10, டிசம்பர் 2023 12:37:30 PM (IST)

தொடர் மழை: தாமிரபரணி கரையோர பகுதி மக்களுக்கு எச்சரிக்கை
ஞாயிறு 10, டிசம்பர் 2023 12:34:43 PM (IST)

நாசரேத் தூய யோவான் பெண்கள் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா
ஞாயிறு 10, டிசம்பர் 2023 11:15:23 AM (IST)
