» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாநகராட்சி 24வது வார்டு தார் சாலை எங்கே? அமமுக கேள்வி!

திங்கள் 2, அக்டோபர் 2023 5:20:22 PM (IST)



தூத்துக்குடி மாநகராட்சி 24 வது வார்டு பகுதியில் தார் சாலை அமைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் வலியுறுத்தியுள்ளது. 

இது தொடர்பாக அமமுக மாவட்ட செயலாளர் பிரைட்டர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தூத்துக்குடி மாநகராட்சி 24 வது வார்டு, வடக்கு பிள்ளையார் கோவில் தேர்வில் சரள் மண் விரித்து பல நாட்கள் ஆகியும், தார் ரோடு போடப்படவில்லை. பொதுமக்கள், இரு சக்கர வாகனத்தில் செல்வோர், மாணவ, மாணவியர் மிகுந்த பாதிப்பிற்குள்ளாகிறார்கள்.

எனவே மழை காலம் தொடங்கிவிட்டதால், தார் சாலை அமைக்கும் பணியினை உடனடியாக செய்யவேண்டும். மேலும், மாநகராட்சி 24 வது வார்டு, சேதுராஜா தெருவில் இருந்து, மட்டக்கடை வரை செல்லும் குண்டும், குழியுமாக இருக்கும் இணைப்பு சாலையினை உடனடியாக சரி செய்ய வேண்டும். சந்தன மாரியம்மன் கோவில் அருகில் உள்ள மண் குவியலை உடனடியாக அகற்றிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





CSC Computer Education


Arputham Hospital



Thoothukudi Business Directory