» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் ஓடும் பஸ்சில் ஒருவர் திடீர் மரணம்!

திங்கள் 2, அக்டோபர் 2023 4:19:48 PM (IST)

தூத்துக்குடியில் பேருந்தில் பயணம் செய்த ஒருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 

நெல்லையில் இருந்து தூத்துக்குடிக்கு அரசு பேருந்து வந்தது இந்த பஸ்ஸில் 60  வயது மதிக்கத்தக்க ஒருவர் பயணம் செய்து உள்ளார். இவர் வல்லநாட்டில் இருந்து தூத்துக்குடிக்கு டிக்கெட் வாங்கி உள்ளார். வரும் வழியில் இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது சிறிது நேரத்தில் பஸ்ஸில் படுத்தபடியே இறந்து விட்டார். இந்த பஸ் தூத்துக்குடி வந்ததும் டிரைவர் மத்திய பாகம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்.

அதன் பெயரில் இன்ஸ்பெக்டர் ஐயப்பன் மற்றும் போலீசார் சம்பவத்தை சென்று உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், அவர் வல்லநாடு கற்பக விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த முத்து மகன் மாடசாமி (65) என்று தெரியவந்தது. விசாரணைக்கு பின்னர் அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த சம்பவம் சக பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital












Thoothukudi Business Directory