» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வெளிமாநில லாட்டரி சீட்டு விற்றவர் கைது : இருசக்கர வாகனம், செல்போன் பறிமுதல்!

திங்கள் 2, அக்டோபர் 2023 11:42:03 AM (IST)



குரும்பூர் அருகே சட்டவிரோதமாக லாட்டரி விற்றவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 2948 வெளிமாநில லாட்டரி சீட்டுகள், இருசக்கர வாகனம், செல்போன் மற்றும் ஏடிஎம் கார்டு பறிமுதல் செய்யப்பட்டது.

தூத்துக்குடி  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன்  உத்தரவின்படி ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர்  மாயவன் மேற்பார்வையில் குரும்பூர் காவல் நிலைய ஆய்வாளர்  ராமகிருஷ்ணன் தலைமையில் உதவி ஆய்வாளர்  சுப்பிரமணியன், சிறப்பு உதவி ஆய்வாளர்  அருள் மோசஸ், தலைமை காவலர்  சங்கர் மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டபோது அம்மன்புரம் பேருந்து நிறுத்தம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை செய்தனர். 

விசாரணையில், அவர் மேலபுதுக்குடி பகுதியைச் சேர்ந்த சுடலைமகன் முருகேசன் (62) என்பதும் சட்டவிரோதமாக  வெளிமாநில லாட்டரி சீட்டுகள் விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. உடனே போலீசார் முருகேசனை கைது செய்து அவரிடமிருந்த ரூ.1லட்சம் மதிப்புள்ள 2948 வெளிமாநில லாட்டரி சீட்டுகள், இருசக்கர வாகனம், ஒரு செல்போன் மற்றும் ஏடிஎம் கார்டு ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து குரும்பூர் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மக்கள் கருத்து

ஓட்டு போட்ட முட்டாள்Oct 2, 2023 - 11:51:32 AM | Posted IP 162.1*****

அப்போ கோவைல ஒருத்தருக்கு 25 கோடி பரிசு விழுந்தது, போய் பறிமுதல் பண்ண வேண்டியது தானே. தமிழர்கள் யாராவது பரிசு விழுந்தால் மட்டும் கண்டுக்காமல் போவாங்க, இது என்னவகையான டாஸ்மாக் துட்டு அரசு?

ஓட்டு போட்ட முட்டாள்Oct 2, 2023 - 11:48:56 AM | Posted IP 162.1*****

அப்போ கோவைல ஓணம் பரிசுக்கு 25 கோடி வென்ற தமிழர்களை கண்டால் மூடிட்டு இருபங்களாம். நாங்க எல்லாம் இளித்த வாயனுங்க. போங்கய்யா குடிகார முட்டாள் பொறாமை பிடித்த துட்டு ஆட்சியும்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital











Thoothukudi Business Directory