» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு : தூத்துக்குடியில் பரபரப்பு!
திங்கள் 2, அக்டோபர் 2023 10:31:11 AM (IST)
தூத்துக்குடியில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடிய மர்ம நபர்களை போலிசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி டீச்சர்ஸ் காலனி 3வது தெருவைச் சேர்ந்தவர் செல்வராஜ் (73). தூத்துக்குடியில் உள்ள உரத் தொழிற்சாலையில் உதவி மேனேஜராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். நேற்று முன்தினம் இரவு இவரை வீட்டின் பின்பக்க கதவை உடைத்து மர்ம ஆசாமிகள் வீட்டுக்குள் புகுந்து பீரோவில் இருந்த ரூ.10ஆயிரம் பணம், 4 கிராம் கம்மல் ஆகிவற்றை திருடி சென்று விட்டார்களாம்.
இதுகுறித்து தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் செல்வராஜ் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் முத்தமிழ் அரசன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
மாமன்னன்Oct 4, 2023 - 06:15:53 PM | Posted IP 172.7*****