» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
திருச்செந்தூரில் கடும் போக்குவரத்து நெரிசல்.!
திங்கள் 2, அக்டோபர் 2023 8:29:44 AM (IST)
திருச்செந்தூா் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய பல்லாயிரக் கணக்கான பக்தா்கள் வந்ததால் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, நகரமே திக்குமுக்காடியது.
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் நடை நேற்று அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு, தொடா்ந்து பூஜைகள் நடைபெற்றன. அதிகாலை முதலே பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் கடலில் புனித நீராடி கோயிலில் தரிசனம் செய்தனா். பொது தரிசனம், ரூ. 100 கட்டணப்பாதையில் பல மணி நேரம் காத்திருந்ததால் திருக்கோயில் வளாகம் பக்தா்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. ரூ.100 கட்டணப்பாதையானது கோயில் வளாகத்தில் தொடங்கி சன்னதித் தெரு வரையில் நீண்டது.
திருச்செந்தூா் கோயிலில் தற்போது பெருந்திட்ட வளாகப் பணிகள் நடைபெற்று வருவதால், கோயில் வளாகத்தில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வாகனங்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுகிறது. இதனால் ரத வீதிகளில் வாகனங்களை நிறுத்திவிட்டு பக்தா்கள் கோயிலுக்கு சென்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
ரத வீதிகளில் கிடைக்கும் இடத்தில் எல்லாம் பக்தா்கள் வாகனங்களை நிறுத்துவதால், அந்த வாகனங்களை வெளியேற்ற முடியாமலும், கட்டுப்படுத்த முடியாமலும் காவல் துறையினா் சிரமப்படுகின்றனா். எனவே, திருவிழா காலங்களைப் போல வார விடுமுறை நாள்களிலும் கூடுதலான காவல்துறையினரை நியமித்து நகரின் எல்லையிலேயே வாகனங்களை நிறுத்தி, அங்கிருந்து பக்தா்கள் வசதிக்காக பேருந்துகளை இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
மக்கள் கருத்து
SurendranOct 2, 2023 - 09:22:50 PM | Posted IP 172.7*****
No proper security, No proper arrow marks or sign boards available, few boards are displayed to wear dress and another board says remove shirts.. which one has to be followed.. its question marks ?.( but personally we have to understand ourself instead asking authorities) .. huge money are collected by the govt department but till we are struggling ... most of the roads are very narrow and difficult drive the vehicle till we reaches hotel for boarding which is near by temple ( most of hotels are located near the temple... we can't expect neat and clean even.. its becoming worse day by day .. dust box are to be alloted more and to be kept at all corners...need more securities also .. anyway no one is going to improve it and our message will go to dust box only even though if we highlighted to the govt.. Nothing is going to happen for the people and still we need to struggle a lot.. I personnel not interested to visit again and its better to pray our god inside the house itself .. its becoming tourist spot with same setup .. railway stations are far better when compare to such worship places .. Govt has to spend more infra facility to develop thiruchendur Murugan temple .. we should hand over to Private section or to the corporate section to develop like tirupati temple . all the best
S Ramalingam,Oct 3, 2023 - 11:24:25 AM | Posted IP 172.7*****