» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சென்னை செல்லும் ஆசையில் வீட்டை விட்டு வெளியேறிய 3 சிறுவா்கள் மீட்பு!

திங்கள் 2, அக்டோபர் 2023 8:26:24 AM (IST)

சென்னை செல்லும் ஆசையில் வீட்டை விட்டு வெளியேறிய 3 சிறுவா்களை மதுரை ரயில்வே போலீசார் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனா்.

தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகனேரி பெரியான்விளையைச் சோ்ந்த தம்பதி சுபா முருகன்-பரிமளாதேவி. இவா்களது குழந்தைகள் சுஜன் (14) , ராஜா ஹரிஷ் (13), கனிஷ்கா (12). மூவரும் பள்ளி மாணவா்கள். தற்போது பள்ளி விடுமுறை என்பதால், கடந்த சனிக்கிழமை வீட்டில் இருந்தனா். வேலைக்குச் சென்ற பரிமளாதேவி, மாலை வீட்டிற்கு திரும்பிய போது குழந்தைகளை காணவில்லை.

இதுகுறித்த தகவலின் பேரில் ஆறுமுகனேரி போலீசார் விசாரணை நடத்தினர். அருகில் உள்ளவா்களிடம் விசாரித்த போது, மதியம் பேருந்தில் 3 பேரும் ஏறிச்சென்றது தெரியவந்தது. இதையடுத்து, குறிப்பிட்ட பேருந்து நடத்துநரிடம் விசாரித்ததில், தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்தில் 3 பேரும் இறங்கி விட்டதாக தகவல் தெரிவித்தாா். இதையடுத்து போலீசார், ரயில்வே போலீசாரை தொடா்பு கொண்டனா். 

சென்னை செல்லும் முத்துநகா் எக்ஸ்பிரஸ் ரயிலில் ரயில்வே போலீசார் தேடியபோது, சிறுவா்கள் அதில் பயணம் செய்துகொண்டிருந்தது தெரியவந்தது. அவா்கள் மதுரை ரயில் நிலையத்தில் ரயில்வே போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனா். பின்னா் ஆறுமுகனேரி போலீசார் மதுரைக்கு விரைந்து குழந்தைகளை மீட்டு வந்து பெற்றோரிடம் ஒப்படைத்தனா்.

சில நாள்களுக்கு முன்பு பெற்றோருடன் சென்னையில் உள்ள உறவினா் வீட்டிற்கு இச்சிறுவா்கள் சென்று வந்துள்ளனா். அந்த நினைப்பில் சென்னை செல்லும் ஆசையில் 3 பேரும் வீட்டை விட்டுச் சென்றது விசாரணையில் தெரியவந்தது.


மக்கள் கருத்து

ஓட்டு போட்ட முட்டாள்Oct 2, 2023 - 11:25:49 AM | Posted IP 162.1*****

ஒவ்வொரு ஏரியாவில் சிறுவர்களை ஊக்குவிக்கும் விளையாட்டு மைதானங்கள், பார்க், ஆழம் குறைவான நீச்சல் குளங்கள் அமைக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் நிறைய சிறுவர்கள் விடுமுறை நாட்களில் சந்தோஷமடைவார்கள். சாராய அரசுக்கு மூளை இல்லை.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital

Thoothukudi Business Directory