» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி பாரதியார் வித்யாலயம் பள்ளி நாட்டு நலத்திட்ட சிறப்பு முகாம்!
ஞாயிறு 1, அக்டோபர் 2023 4:45:08 PM (IST)

தூத்துக்குடி பாரதியார் வித்யாலயம் மேல்நிலைப் பள்ளியின் நாட்டு நலத்திட்ட சிறப்பு முகாம் 7 நாட்கள் சிதம்பரநகர் கல்விக்கழக நடுநிலைப்பள்ளியில் நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக இன்று முதியோர் தினம் கொண்டாடப்பட்டது. மாணவர்களுக்கு உலகம் முழுவதிலும் உள்ள மூத்த குடிமக்களை மதிக்கவும், மரியாதையை செலுத்தவும், குடும்பம், சமூகம் மற்றும் நாட்டுக்கு அவர்கள் ஆற்றிய சேவைகளை நினைவு கூறும் வகையிலும், அவர்களின் அறிவு, ஆற்றல் மற்றும் சாதனைகளை பார்த்துக் கற்றுக்கொள்ளவும் மக்களுக்கு எடுத்துரைக்கும் நாளாக முதியோர் தினம் கொண்டாடப்படுவதே இதன் முக்கிய நோக்கம் என்று எடுத்து கூறப்பட்டது.
அதனைத் தொடர்ந்து NSS மாணவர்கள் சிதம்பரநகரில் உள்ள பாசக்காரங்கள் முதியோர் இல்லம் சென்று அங்குள்ள 50 முதியோர்களுக்கு பிஸ்கட் பாக்கெட் வழங்கி முதியோர் தின வாழ்த்துக்களை தெரிவித்தனர். இதற்கான ஏற்பாடுகளை பள்ளித் தலைமையாசிரியர் தட்சிணாமூர்த்தி, NSS ஒருங்கிணைப்பாளர் மரகதவள்ளி, கல்விக்கழக நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சுப்ரமணியன், ஆசிரியர்கள் சுபாஷ், பாலசுந்திர கணபதி, பகவதி ஆகியோர் செய்திருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருச்செந்தூா் பக்தா் பலி : பா.ஜ.க. ஆா்ப்பாட்டம்!
வெள்ளி 1, டிசம்பர் 2023 7:46:44 AM (IST)

தூத்துக்குடியில் பைக் திருடிய 2 பேர் கைது!
வியாழன் 30, நவம்பர் 2023 9:43:04 PM (IST)

அகில இந்திய பெஞ்ச் பிரஸ் போட்டியில் பதக்கம் வென்று தூத்துக்குடி வீரர்கள் சாதனை
வியாழன் 30, நவம்பர் 2023 9:32:11 PM (IST)

தமிழ்நாட்டில் முதலீடு செய்ய ஆர்வத்தோடு இருக்கிறார்கள்: கனிமொழி எம்பி பேச்சு!
வியாழன் 30, நவம்பர் 2023 8:43:06 PM (IST)

திருச்செந்தூரில் மின்சாரம் தாக்கி பக்தர் பலி: கோவில் நிர்வாகம் அலட்சியம் - தந்தை புகார்!
வியாழன் 30, நவம்பர் 2023 5:38:16 PM (IST)

மின் சிக்கனம் விழிப்புணர்வு கருத்தரங்கம்!
வியாழன் 30, நவம்பர் 2023 5:16:08 PM (IST)

Dhakshina moorthyOct 1, 2023 - 09:17:23 PM | Posted IP 172.7*****