» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் 15 லட்சம் பனை விதைகள் நடும் நிகழ்ச்சி: அமைச்சர், மேயர் பங்கேற்பு
ஞாயிறு 1, அக்டோபர் 2023 10:41:39 AM (IST)

தூத்துக்குடியில் 15 லட்சம் பனை விதைகள் நடும் நிகழ்ச்சியை அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் துவக்கி வைத்தனர்.
கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் கடற்கரை மாவட்டங்களில் தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நல வாரியம் கிரீன் நாடா சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் நாட்டு நலப்பணி திட்டம் இணைந்து 1 கோடி பனை விதைகள் நடும் நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்டத்தில் வேம்பார் முதல் பெரியதாழை வரை 163 கிலோமீட்டர் தூரத்திற்கு 15 லட்சம் பனை விதைகள் நடும் துவக்க விழா தூத்துக்குடி கேம்ப்-2 கடற்கரையில் நடைபெற்றது. மகளிர் நலன் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி பனை விதைகள் நட்டு துவக்கி வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் திமுக மாநகரச் செயலாளர் ஆனந்த சேகரன், சமத்துவ மக்கள் கழகம் மாவட்ட செயலாளர் மாலை சூடி அற்புதராஜ், மாவட்ட அவைத் தலைவர் கண்டிவேல், மாவட்ட பொருளாளர் பழனிவேல், மாவட்ட துணைச் செயலாளர் அருள்ராஜ் மாவட்ட வர்த்தக அணி செயலாளர் சிவசு முத்துக்குமார், மாவட்ட தொண்டர் அணி செயலாளர் முத்து செல்வம், மாவட்ட பிரதிநிதி பெரியசாமி மாநகரச் செயலாளர் உதயசூரியன், நாடார் பேரவை தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் அருண் சுரேஷ் குமார் மாநகர வார்டு செயலாளர்கள் செந்தூர் பாண்டி செல்வராஜ் வாகைகுளம் ராஜா மற்றும் ஆல் கண் டிரஸ்ட் நிறுவனர் அரசு வழக்கறிஞர் மோகன்தாஸ் சாமுவேல், காமராஜ் கல்லூரி என்சிசி பேராசிரியர் ஆனந்தராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் பைக் திருடிய 2 பேர் கைது!
வியாழன் 30, நவம்பர் 2023 9:43:04 PM (IST)

அகில இந்திய பெஞ்ச் பிரஸ் போட்டியில் பதக்கம் வென்று தூத்துக்குடி வீரர்கள் சாதனை
வியாழன் 30, நவம்பர் 2023 9:32:11 PM (IST)

தமிழ்நாட்டில் முதலீடு செய்ய ஆர்வத்தோடு இருக்கிறார்கள்: கனிமொழி எம்பி பேச்சு!
வியாழன் 30, நவம்பர் 2023 8:43:06 PM (IST)

திருச்செந்தூரில் மின்சாரம் தாக்கி பக்தர் பலி: கோவில் நிர்வாகம் அலட்சியம் - தந்தை புகார்!
வியாழன் 30, நவம்பர் 2023 5:38:16 PM (IST)

மின் சிக்கனம் விழிப்புணர்வு கருத்தரங்கம்!
வியாழன் 30, நவம்பர் 2023 5:16:08 PM (IST)

மதர் தெரசா பொறியியல் கல்லூரியில் சிறுதானிய விழிப்புணர்வு கருத்தரங்கு!
வியாழன் 30, நவம்பர் 2023 3:17:02 PM (IST)

. செல்வகுமார், நிறுவனர் & மாநில தலைவர், தமிழ் நாடு காங்கிரஸ்.Oct 1, 2023 - 06:51:47 PM | Posted IP 172.7*****