» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

எம்பவர் இந்தியா சார்பில் உலக முதியோர் தினம்

ஞாயிறு 1, அக்டோபர் 2023 10:30:50 AM (IST)

தூத்துக்குடியில் எம்பவர் இந்தியா சமூக சேவை அமைப்பு சார்பில்;; பீச் ரோட்டில் அமைந்துள்ள எம்பவர் மக்கள் மருந்தகத்தில் உலக முதியோர் தினம் அனுசரிக்கப்பட்டது. 

இந்நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி பேசிய எம்பவர் இந்தியா கௌரவ செயலாளரும், தமிழ்நாடு மூத்த பெருமக்கள் நல இயக்கத்தின் நிறுவனருமான ஆ.சங்கர் கூறியதாவது : உலக முதியோர் தினம் முதியோரை மேன்மைப்படுத்தும் வகையில் கடந்த 1990ஆம் ஆண்டில் அக்டோபர் முதல் தேதியை உலக முதியோர் தினமாக ஐ.நா. அறிவித்தது. முதியோர் சுதந்திரம், பங்களிப்பு, வயதானவர்களை மதித்தல் போன்றவை உலக முதியோர் தினத்தின் முக்கிய நோக்கமாகும்.

உலக அளவில் 2008ம் ஆண்டு நிலவரப்படி 60 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையோர் எண்ணிக்கை 60 கோடியைத் தாண்டியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த எண்ணிக்கை வரும் 2025ம் ஆண்டில் இரு மடங்காக உயரும் என்று தெரிகிறது. எதிர்வரும் 2050 ஆம் ஆண்டில் ஆறில் ஒருவர் 65 வயதிற்கு மேற்பட்டவராக இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகெங்கும் வாழும் முதியோர்களின் நலன் மற்றும் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து ஆராய்வதும் அவர்களுக்கென ஒரு சமூக கட்டமைப்பை உருவாக்குவதுமே இந்த நாளின் பிரதான நோக்கமாகும். முதுமையை மதிப்போம், முதியோர்களை அரவணைப்போம், மூத்த குடிமக்கள் கௌரவமாக வாழ வழி வகுப்போம் என எம்பவர் சங்கர் கூறினார்.

கூட்டத்தில் கொரோனா காலத்தில் மூத்த குடிமக்களுக்கான இரயில்வே பயணக் கட்டண சலுகை விலக்கிக் கொள்ளப்பட்டது. இந்த வசதியை உடனடியாக மீண்டும் அமல்படுத்த வேண்டுமென மத்திய அரசை கேட்டுக் கொள்கிறோம். தமிழக அரசினால் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட மாநில அளவிலான முதியோர் ஆலோசனைக் குழுவை உடனடியாக அமைக்க வேண்டும்.

முதியோர்கள் நலம் பேண முதியோர் நல வாரியம் ஒன்றை தமிழக அரசு புதிதாக உருவாக்க வேண்டும். முதியோர்களுக்காக அனைத்து மாவட்டங்களிலும் பகல் நேர ஓய்வு மையங்களை தமிழக அரசு ஆரம்பிக்க வேண்டுகிறோம் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் எம்பவர் இந்தியா மேலாளர் லலிதாம்பிகை நன்றி கூறினார்.


மக்கள் கருத்து

கந்தசாமிOct 1, 2023 - 11:19:18 AM | Posted IP 172.7*****

எல்லாம் கிழடுகளும் தங்கள் தேவைகளை கருத்துக்கள் சேவைகள் என்ற பெயரில் முன் வைக்கின்றன

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsArputham Hospital
Thoothukudi Business Directory