» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
சீராக குடிநீர் வழங்க கோரி பாஜக ஆர்ப்பாட்டம்!
வெள்ளி 29, செப்டம்பர் 2023 5:38:32 PM (IST)

கழுகுமலை பேரூராட்சியில் சீராக குடிநீர் வழங்க கோரி பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கழுகுமலை பேரூராட்சியில் 15 நாட்களுக்கு ஒரு முறை தான் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதனால் போதிய குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருவதாகவும், சீராக குடிநீர் விநியோகம் செய்ய பேரூராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், கழுகுமலை பேரூராட்சி பகுதியில் சீராக குடிநீர் வழங்க வலியுறுத்தி பாரதிய ஜனதா கட்சி சார்பில் இன்று கழுகுமலையில் உண்ணாவிரத போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.
உண்ணாவிரத போராட்டத்திற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்து விட்டனர். இதனால் பாஜகவினர் காவல் துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்திக் கொள்ள போலீசார் அனுமதி கொடுத்தனர். இதனைத் தொடர்ந்து கழுகுமலை கழுகசலமூர்த்தி திருக்கோவில் அருகே பாரதிய ஜனதா கட்சியினர் ஒன்றிய தலைவர் ஜெகதீஸ் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சீராக குடிநீர் வழங்க வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
இதில் மாவட்டத் துணைத் தலைவர்கள் ராஜேந்திரன் , ராஜ்குமார், மாவட்ட பொது செயலாளர் வேல்ராஜா, மாவட்ட பொருளாளர் கணேஷ், தொழில் பிரிவு மாவட்ட தலைவர் மாரியப்பன் , பிரச்சார பிரிவு மாவட்ட தலைவர் லட்சுமண குமார், ஊடகப் பிரிவு மாவட்ட தலைவர் அம்மன் மாரிமுத்து, விவசாயிகள் பிரிவு மாவட்ட தலைவர் மருதையா, கோவில்பட்டி நகராட்சி கவுன்சிலர் விஜயகுமார், முன்னாள் ராணுவ வீரர் பிரிவு மாவட்ட தலைவர் சுந்தர்ராஜன், பட்டியலின பிரிவு மாவட்ட தலைவர் அய்யாதுரை பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதையொட்டி கழுகுமலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சாணைக்கல்லில் சிந்து எழுத்துக்கள் கண்டெடுப்பு : பட்டினமருதூரில் தொல்பொருள் அதிசயம்!
திங்கள் 15, டிசம்பர் 2025 11:38:21 AM (IST)

தூத்துக்குடி சிவன் கோவிலில் மார்கழி மாதம் பூஜை நேரங்கள் மாற்றம்
திங்கள் 15, டிசம்பர் 2025 11:07:46 AM (IST)

தூத்துக்குடியில் ஆட்டோ கவிழ்ந்து விபத்து: 10 மாணவிகள், டிரைவர் காயம்!
திங்கள் 15, டிசம்பர் 2025 10:17:22 AM (IST)

தூத்துக்குடி - நாசரேத் திருமண்டல தேர்தலில் 100% வெற்றி : எஸ்டிகே ராஜன் அணியினர் பேட்டி
திங்கள் 15, டிசம்பர் 2025 8:04:02 AM (IST)

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: பள்ளி ஆசிரியர் கைது
திங்கள் 15, டிசம்பர் 2025 7:52:26 AM (IST)

மினிலாரியில் கடத்தப்பட்ட ரூ.10 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல் : 5 பேர் கைது
திங்கள் 15, டிசம்பர் 2025 7:50:35 AM (IST)










