» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் விநாயகர் சதுர்த்தி விழா: கோவில்களில் சிறப்பு பூஜை-பக்தர்கள் தரிசனம்!

திங்கள் 18, செப்டம்பர் 2023 10:13:41 AM (IST)தூத்துக்குடியில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. நகரின் பல பகுதிகிளில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. 

இந்துக்களின் முக்கிய விழாவான விநாயகர் சதுர்த்தி ஆண்டுதோறும் வெகு  சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தூத்துக்குடியில் இன்று அனைத்து விநாயகர் கோவில்களிலும் விநாயகருக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டது. தூத்துக்குடி மாநகர் இந்து முன்னணி சார்பாக தபசு மண்டம் அருகில் விநாயகர் சதுர்த்தி விழா இந்து எழுச்சி நாளாக கொண்டாடப்பட்டது. 

இதையொட்டி காலை 5 மணி அளவில் கணபதி ஹோமம் மற்றும் கோமாதா பூஜை நடைபெற்று  காலை 7.10  மணியளவில் பிரதான பிள்ளையார் பிரதிஷ்டை செய்யப்பட்டது.   நிகழ்ச்சியில் மாநகர் மாவட்ட தலைவர் இசக்கி முத்து குமார் தலைமை வகித்தார். இந்து முன்னணியைச் சேர்ந்த மாரியப்பன், சக்திவேல்,திருப்பதி வெங்கடேஷ், ஆதிநாத ஆழ்வார், சிபு உட்பட பலர் கலந்து கொண்டனர். 

வருகிற 24ம் தேதி ஞாயிற்றுக்கிழமை இந்து முன்னணி சார்பாக நடைபெறும் விநாயகர் ஊர்வலம், தபசு மண்டபத்தில் துவங்கி திரேஸ்புரம் சங்குமுக விநாயகர் கடற்கரையில் விஜர்சனம் செய்யப்படுகிறது. தூத்துக்குடி மாநகரில் உள்ள பல விநாயகர் கோவில்களில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் வீடுகளில் சிறிய சிறிய சிலைகளை வைத்து இந்துக்கள் வழிபட்டு வருகிறார்கள். 

விழாவை முன்னிட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். விநாயகர் சதுர்த்தி திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் 584 சிலைகள் வரை வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை  276 சிலைகள் வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital

Thoothukudi Business Directory