» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தென்னிந்திய ஸ்கேட்டிங் ரோல் பால் போட்டி: தமிழக அணிகள் முதலிடம்

திங்கள் 18, செப்டம்பர் 2023 8:14:16 AM (IST)கோவில்பட்டியில் நடைபெற்ற 4ஆவது சப்-ஜூனியா் ஆண்கள், பெண்களுக்கான தென்னிந்திய ஸ்கேட்டிங் ரோல் பால் சாம்பியன்ஷிப் 2023 - 24ஆம் ஆண்டுக்கான போட்டியில் தமிழக அணிகள் முதலிடம் பிடித்தன.

தூத்துக்குடி மாவட்டம்  கோவில்பட்டி உண்ணாமலை பொறியியல் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் தமிழகம், கேரளம், கா்நாடகம், தெலங்கானா, ஆந்திரம், புதுச்சேரி ஆகிய 6 மாநிலங்களைச் சோ்ந்த அணிகள் பங்கேற்றன. லீக் முறையில் ஆட்டம் நடைபெற்றது. நேற்று அரையிறுதி, இறுதிப் போட்டிகள் நடைபெற்றன. ஆண்களுக்கான இறுதிப் போட்டியில் 3 - க்கு 2 என்ற கோல்கணக்கில் தெலங்கானா அணியை தமிழக அணி வென்றது. பெண்களுக்கான இறுதிப் போட்டியில் 3-க்கு 0 என்ற கோல்கணக்கில் கேரள அணியை தமிழக அணி வென்றது.

பரிசளிப்பு விழாவுக்கு, தென்னிந்திய ரோல் பால் அசோசியேஷன் பொதுச்செயலா் சுப்பிரமணியம் தலைமை வகித்தாா். தமிழ்நாடு ரோல் பால் அசோசியேஷன் பொதுச்செயலா் கோவிந்தராஜ் முன்னிலை வகித்தாா். உண்ணாமலை பொறியியல் கல்லூரி முதல்வா் சண்முகம், துணை முதல்வா் ரவீந்திரன், சித்திரம்பட்டி ஊராட்சித் தலைவா் கேசவன், மதுரை மாவட்ட ரோல் பால் அசோசியேஷன் ராபின்ராஜ்காந்தன் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகப் பங்கேற்றனா். 

ஆண்கள், பெண்களுக்கான பிரிவுகளில் முதல் 4 இடங்களைப் பிடித்த அணிகளுக்கு கோப்பைகள் வழங்கப்பட்டன. தூத்துக்குடி மாவட்ட அமெச்சூா் ரோல் பால் அசோசியேஷன் தலைவா் ஜோசப்ராஜ் வரவேற்றாா். செயலா் தங்கமாரியப்பன் நன்றி கூறினாா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsArputham HospitalThoothukudi Business Directory