» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

முன்னாள் அமைச்சர் சி.த. செல்லபாண்டியன் மீது 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு!

ஞாயிறு 17, செப்டம்பர் 2023 6:07:57 PM (IST)

திமுகவினர் புகார் எதிரொலியாக முன்னாள் அமைச்சர் சி.த. செல்லபாண்டியன் மீது 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளத்தில் நடந்த பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும் தலைமை கழகச் செயலாளருமான சி.த. செல்லபாண்டியன் பேசும்போது, கனிமொழி எம்பி அமைச்சர் கீதாஜீவன் ஆகியோரை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. 

இதைத்தொடர்ந்து விளாத்திகுளம் காவல் நிலையத்தில் திமுகவினர் புகார் செய்தனர். புகாரின் பேரில் விளாத்திகுளம் போலீசார் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.த.செல்லபாண்டியன் மீது 153A, 505(1), 294 (B) ஆகிய 3 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் தூத்துக்குடி மாவட்ட அதிமுகவினர்  இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Arputham Hospital


Thoothukudi Business Directory