» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
சென்னை-நெல்லை வந்தே பாரத் ரயிலுக்கான எண் ஒதுக்கீடு: பயணிகள் மகிழ்ச்சி
சனி 16, செப்டம்பர் 2023 3:29:44 PM (IST)
சென்னை-நெல்லை இடையே இயக்கப்பட உள்ள வந்தே பாரத் ரயிலுக்கான எண் ஒதுக்கப்பட்டுள்ளதால் நெல்லை பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வந்தே பாரத் ரயில் கடந்த 2019ம் ஆண்டு டெல்லி -வாரணாசி இடையே முதலில் இயக்கப்பட்டது. தற்போது சென்னை - மைசூர், சென்னை- கோவை என மொத்தம் 20க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தின் தென் மாவட்டங்களை இணைக்கும் வகையில் சென்னை - திருநெல்வேலி இடையே வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்க தெற்கு ரயில்வே திட்டமிட்டது.
இதற்காக சென்னை- நெல்லை இடையே 660 கி.மீ தொலைவுக்கு இரட்டை அகல ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னை - திருநெல்வேலி இடையே 10 மணி நேர இடைவெளியில் விரைவு ரயில் நிலையில் இயக்கப்படும் நிலையில் 8 மணி நேரத்தில் வந்தே பாரத் ரயில் சென்றடையும். திருநெல்வேலியில் இருந்து காலை 6 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் ரயில், சென்னைக்கு பிற்பகல் 2 மணிக்கு வந்தடையும் என்றும், சென்னையிலிருந்து பிற்பகல் 3 மணிக்கு புறப்படும் ரயில் இரவு 11 மணியளவில் திருநெல்வேலியை சென்றடையும் என்றும் கூறப்படுகிறது.
இந்த ரயில் திருச்சி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட மூன்று நிலையங்களில் நின்று செல்லும் என்று தெரிகிறதது. இந்நிலையில் சென்னை -நெல்லை இடையான வந்தே பாரத் ரயிலுக்கு எண் ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னை - திருநெல்வேலி இடையே இயக்க திட்டமிட்டிருக்கும் வந்தே பாரத் ரயிலுக்கு 20631/ 20632 என எண் ஒதுக்கப்பட்டுள்ளதால், விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என்ற நம்பிக்கையில் நெல்லை பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மக்கள் கருத்து
KannanSep 19, 2023 - 06:22:31 AM | Posted IP 172.7*****
Sankaranlkovil Stop required for Senkottai vandebarath
T.VENKATAKRISHNANMar 6, 1695 - 08:30:00 AM | Posted IP 172.7*****
Unreserved seating compartments should be made available.
சரவணன்Sep 18, 2023 - 11:23:38 AM | Posted IP 172.7*****
விழுப்புரம் ரயில் நிலையம் நிக்கணும்
த.சுந்தர ராஜன்Sep 18, 2023 - 10:27:49 AM | Posted IP 172.7*****
செங்கோட்டை சென்னை வந்தே பாரத் வேண்டும்
கந்தசாமி.sSep 18, 2023 - 07:40:01 AM | Posted IP 172.7*****
வரவேற்கிறோம் ஆனால் கட்டனம் எல்லோரும் பயணம் செல்லும் வகையில் இருக்கட்டும் நன்றி
Malathi GSep 18, 2023 - 07:18:08 AM | Posted IP 172.7*****
We need vanthe barath to tenkasi also
MalathiSep 18, 2023 - 07:17:00 AM | Posted IP 172.7*****
We need stop at Chengalpet or tambaram
Ramachandran VSep 17, 2023 - 11:09:58 PM | Posted IP 172.7*****
Kanyakumari come to me My interest
AngayarkannanSep 17, 2023 - 10:17:06 PM | Posted IP 172.7*****
Sengotti need vanthey bharath train
S.CHANDRAMOHAN .SivakasiSep 17, 2023 - 08:55:56 PM | Posted IP 172.7*****
Should stop at Virudhunagar
Lalitha Banu.RSep 17, 2023 - 08:46:26 PM | Posted IP 172.7*****
Diwali ku vidunga
Gnanam johnSep 17, 2023 - 06:49:32 PM | Posted IP 172.7*****
ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்
இரவு 11 மணிக்கு நெல்லையில் இறங்கி எப்படி ஊருக்கு செல்வார்கள்.
வாஞ்சி மணியாசியில் இருந்து தூத்துக்குடி க்கு
ஒரு வந்தேபாரத்
விட வேண்டும்
Keizer Narayanan-Virudhunagar. Sep.17:time ;13.00 hrs..Sep 17, 2023 - 12:39:51 PM | Posted IP 172.7*****
விருதுநகரில் நின்று செல்ல வேண்டடுகிறேன்
Keizer Narayanan-Virudhunagar. Sep.17:time ;13.00 hrs..Sep 17, 2023 - 12:33:06 PM | Posted IP 172.7*****
விருதுநகரில் நின்று செல்ல வேண்டுகிறேன்.
David Ziegan Paul.MSep 17, 2023 - 12:07:15 PM | Posted IP 172.7*****
அன்புடன் வரவேற்கிறேன்
அப்துல் கரீம் பிஜிலிSep 17, 2023 - 08:52:32 AM | Posted IP 172.7*****
இது நீண்ட நாள் எதிர்பார்ப்புகள் தான் நெல்லை மக்களுக்கு ஒரு உற்சாக மகிழ்ச்சி
மாஞ்சோலை நாகராஜ்Sep 17, 2023 - 08:13:31 AM | Posted IP 172.7*****
கூடுதலாக முன்பதிவு செய்யாத பெட்டிகளை இணைத்து இயக்க வேண்டும். இதுவே எமது வேண்டுகோள்.
THAYANITHISep 17, 2023 - 07:29:48 AM | Posted IP 172.7*****
, விரைவில் இயக்க வேண்டுகிறேன் நெல்லை யிலிருந்து இயக்கவும்
PREMKUMARNov 4, 1695 - 06:30:00 AM | Posted IP 172.7*****