» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஏ.பி.சி. மகாலட்சுமி மகளிர் கல்லூரி பொன்விழா : சிறப்பு தபால் உறை வெளியீடு!

வெள்ளி 15, செப்டம்பர் 2023 3:11:36 PM (IST)தூத்துக்குடி ஏ.பி.சி. மகாலட்சுமி மகளிர் கல்லூரியின் பொன் விழாவை முன்னிட்டு சிறப்பு தபால் உறை வெளியிடப்பட்டது. 

தூத்துக்குடி ஏ.பி.சி. மகாலட்சுமி மகளிர் கல்லூரியின் 50-வது ஆண்டு பொன்விழா துவக்க விழா இன்று வ.உ.சிதம்பரம் கல்லூரி கலையரங்கத்தில் நடைபெற்றது. கல்லூரி செயலர் சுப்புலட்சுமி வரவேற்புரை ஆற்றினார். கல்லூரி முதல்வர் கே. சுப்புலட்சுமி ஆண்டறிக்கை வாசித்தார். 

விழாவில் இஸ்ரோ முன்னாள் தலைவர் கே.சிவன் கலந்து கொண்டு விழாவை துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். இந்திய அஞ்சல் துறை மதுரை மண்டல பொது மேலாளர் ஜெயசங்கர் சிறப்பு தபால் உறையை வெளியிட்டார். விழாவில் வஉசி கல்லூரி செயலாளர் சொக்கலிங்கம், முதல்வர் வீரபாகு, கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து

Stella prabhakaranSep 16, 2023 - 07:09:21 AM | Posted IP 172.7*****

Remembering APC Veerabahu who put in much effort to start this institution for the welfare of the gils.May God Bless his whole family who continuously working for the Developments.May it's fame be everlasting.Let this be an fortune to INDIA.🇮🇳💥🇮🇳🛐

Stella prabhakaran.Sep 16, 2023 - 06:53:11 AM | Posted IP 172.7*****

With great respect remembering Mr.APC veerabahu who paved way for the education of innumerable girls from poor families.APC Mahalakmi college must have everlasting fame & name for ever.May God Bless his whole family & all the students🛐 May this institution be known all over INDIA 🇮🇳💥🇮🇳

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital

Thoothukudi Business Directory