» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக மாறும் : தமிழிசை பேட்டி
புதன் 28, ஜூன் 2023 12:47:14 PM (IST)

"குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் திட்டம் நிறைவேறினால், தூத்துக்குடி விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக மாறும்" என்று ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.
திருநெல்வேலியில், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தெலுங்கானா மாநில ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார். வாகைகுளம் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், "பாரத பிரதமர் மோடி அமெரிக்க பயணமானது, அரசாங்கத்தின் தனி விருந்தினராக அவர் அழைக்கப்பட்டு உலகில் மிக சில தலைவர்களுக்கே கிடைத்த மரியாதை அவருக்கு கிடைத்திருக்கிறது. எகிப்த்தின் உயரிய விருது வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்திய திருநாட்டிற்கு, பெருநாட்டிற்கு ஒரு பெயர் என்று தான் சொல்ல வேண்டும். உலகத்தில் மிகப் பிரபலமான தலைவர் என்ற பெருமையை பாரத பிரதமர் பெற்றிருக்கிறார். தமிழக முதலமைச்சர் வெளிநாட்டு பயணம் என்றால் சாதனை என்கின்றனர். பாரத பிரதமர் வெளிநாட்டு பயணம் சென்றார் விமர்சனம் செய்து கொண்டிருந்தார்கள். தற்போது எல்லோருக்கும் தெரியும். வெளிநாட்டு பயணம் செய்துவிட்டு வந்து முதலீடுகளை ஈர்ப்பது மட்டுமல்ல எந்த அளவிற்கு மற்ற நாடுகளில் துணை நமக்கு கிடைக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.
மேலும், தென்பகுதி இன்னும் வளர்ச்சியடைய வேண்டும். நேற்று முன் தினம் வந்தேபாரத் 25வது ரயில் பெட்டி நமது பெரம்பூர் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு இருக்கிறது. முதலில் எல்லாம் இந்த பெட்டிகள் இறக்குமதி செய்யப்பட்டன. இந்த தொழில்நுட்ப முதலிலே இருந்தது. ஆனால் முன்னால் ஆண்டு கொண்டு இருந்த அரசுகள் இதை பயன்படுத்தவில்லை. குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் மிகப்பெரிய ஒரு வாய்ப்பாக தென்பகுதிக்கு கிடைக்கும்.
பத்தாயிரத்திலிருந்து பதினைந்தாயிரம் இளைஞர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை வாய்ப்புகள் கிடைக்கும். குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் வந்ததென்றால் நமது தூத்துக்குடி விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக மாறுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. ஆகவே எல்லா விதத்திலும் தென்பகுதியில் வளர வேண்டும் என்பது என்னுடைய பங்கு இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்..
மக்கள் கருத்து
TN69Jun 29, 2023 - 07:13:10 PM | Posted IP 172.7*****
PREM ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறாத நிலையில் உள்ளது தான் தூத்துக்குடி மாநகரத்தின் வளர்ச்சி; ஊராட்சி ஒன்றியம் போல் உள்ளது 500 வருசம் ஆகும் நீங்க சொன்ன மாதிரி
PREMJun 29, 2023 - 02:30:08 PM | Posted IP 172.7*****
tn 69 ,when v are not able run more trains form pearl city! it takes another deacde? only one train daily mas to tn
TN69Jun 28, 2023 - 08:08:20 PM | Posted IP 172.7*****
இங்க தூத்துக்குடி மக்களுக்கு 2ட்ரெயின் முத்துநகர் & மைசூர் தவிர ட்ரெயின் விடவே ஆள் இல்லை! இதுல சர்வதேச விமான நிலையம் யாருக்கு பணக்கார மக்களுக்கு மட்டுமே எல்லா கட்சிகளும் சாதகமா செஞ்சுக்குறிங்க
JAIHINDJun 28, 2023 - 04:41:51 PM | Posted IP 172.7*****
GREAT WORDS, MADAM.. மோடி ஜி க்கு வாழ்த்துக்கள்
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி - நாசரேத் திருமண்டல தேர்தலில் 100% வெற்றி : எஸ்டிகே ராஜன் அணியினர் பேட்டி
திங்கள் 15, டிசம்பர் 2025 8:04:02 AM (IST)

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: பள்ளி ஆசிரியர் கைது
திங்கள் 15, டிசம்பர் 2025 7:52:26 AM (IST)

மினிலாரியில் கடத்தப்பட்ட ரூ.10 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல் : 5 பேர் கைது
திங்கள் 15, டிசம்பர் 2025 7:50:35 AM (IST)

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் சுதேசி திருவிழா டிச. 26இல் தொடக்கம்!
திங்கள் 15, டிசம்பர் 2025 7:32:18 AM (IST)

திருச்செந்தூரில் 6 அடி ஆழத்துக்கு கடல் அரிப்பு
திங்கள் 15, டிசம்பர் 2025 7:28:04 AM (IST)

தூத்துக்குடி பல்நோக்கு மருத்துவமனை மகப்பேறு மருத்துவமனையாக மாற்றம்: பாஜக கண்டனம்!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 8:06:42 PM (IST)











பெ.ராமர்Jul 6, 2023 - 03:27:50 PM | Posted IP 172.7*****