» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி வி.வி.டி. சிக்னல் மேம்பாலம் பணிகளை விரைந்து துவங்க கோரிக்கை!
சனி 24, ஜூன் 2023 12:59:58 PM (IST)
தூத்துக்குடி வி.வி.டி. சிக்னல் அருகில் உயர் மட்ட பாலம் அமைக்கும் பணிக்காக ரூபாய் 950 இலட்சங்களை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் பணிகளை விரைந்து துவங்க வேண்டும் என எம்பவர் இந்தியா வலியுறுத்தியுள்ளது.
நுகர்வோர் அமைப்புகளுடன் காலாண்டுக் கூட்டம் தொடர்பாக எம்பவர் நுகர்வோர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நடுவம் செயல் இயக்குநர் ஆ. சங்கர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனு: தூத்துக்குடி மாநகராட்சியில் பொது மக்களின் குறைகளை தெரிவிப்பதற்காக 7397731065 என்ற வாட்ஸ் ஆப் எண் உள்ளது. இதில் பல முறை புகார்கள் அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு உங்கள் கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டது. உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். நன்றி என்ற பதில் மட்டும் வருகிறது. ஆனால் இந்த புகார்கள் சரி செய்யபட்டதா என்ற விவரங்கள் தெரிவிக்கப்படுவதில்லை. ஆகவே புகார்களை பதிவு செய்தால் அவற்றிற்கு குறைகள் களையப்பட்டு அதன் பின்னர் பதில் அனுப்பும் முறையை நடைமுறைப்படுத்த மாநகராட்சிக்கு உத்திரவிடுமாறு வேண்டுகிறோம்.
தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பல கோடி ரூபாய் செலவில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் நடந்து வருகிறது. ஆனால் இந்த இடங்களில் பாதுகாப்பு சம்மந்தமான எந்த நடைமுறைகளும் பின்பற்றப்படுவதில்லை. மாநகராட்சியின் சார்பில் வேலை நடைபெறும் இடங்களில் இங்கே ஆட்கள் வேலை செய்கிறார்கள் என்ற தகவல் பலகை, வேலை செய்யும் பணியாளர்கள் பாதுகாப்பு சாதனங்கள் அணிந்திருத்தல், பணிகள் நடைபெறும் இடத்தில் உரிய சாலைத் தடுப்பான்கள் மற்றும் இரவில் ஒளிரும் ரிப்ளெக்டருன் கூடிய அறிவிப்பு நாடாக்கள் ஆகியவற்றை போர்க்கால அடிப்படையில் உடனடியாக ஏற்படுத்தி தருமாறு அன்புடன் வேண்டுகிறோம்.
தூத்துக்குடி மாநகரத்தை ஸ்மார்ட் சிட்டியாக மாற்றும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டு வருவது பாராட்டுக்குரியது. அதே போன்று தூத்துக்குடி விமான நிலையமும் மேம்படுத்தப்படுவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகிறது. ஆனால் தூத்துக்குடி விமான நிலையத்திலிருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை தெரு விளக்குகள் தற்பொழுது இல்லாமல் உள்ளது. இதனால் பொதுமக்களும், நுகர்வோரும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மேலும் இவ்வாறு தெரு விளக்கு வசதிகள் இல்லாமல் இருப்பது வெளிநாட்டினர் மற்றும் வெளி மாநில மக்கள் மத்தியில் நமது தூத்துக்குடி மாநகருக்கு மிகுந்த அவப்பெயரை ஏற்படுத்தி வருகிறது. ஆகவே போர்க்கால அடிப்படையில் உடனடியாக தூத்துக்குடி விமான நிலையம் முதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை தெரு விளக்குகள் அமைக்க ஆவன செய்யுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.
தூத்துக்குடி மாவட்ட மக்களின் நீண்ட கால கோரிக்கையான தூத்துக்குடியிலிருந்து வாஞ்சி மணியாச்சி இரயில் நிலையம் வரை சுமார் 26 கி.மீ. சாலை அமைக்கும் பணிக்காக 108 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தவும், இந்த திட்டத்தை செயல்படுத்த ரூபாய் 2853 இலட்சங்களை ஒதுக்கீடு செய்தமைக்காகவும், அதே போன்று வி.வி.டி. சிக்னல் அருகில் உயர் மட்ட பாலம் அமைக்கும் பணிக்காக ரூபாய் 950 இலட்சங்களை ஒதுக்கீடு செய்தமைக்காகவும் நன்றியை தங்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் இத்திட்டங்களை விரைந்து செயல்படுத்தி மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்குரிய ஆணைகளை பிறப்பிக்குமாறும் அன்புடன் வேண்டுகிறோம்.
தூத்துக்குடி மாவட்டத்தில் அனல் மின் நிலையம் மூலமாக மின்சாரம் தயாரிக்கும் திட்டம் பல இடங்களில் மத்திய, மாநில அரசுகளால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இங்கு பயன்படுத்தப்படும் நிலக்கரியினால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசுக்களை கட்டுப்படுத்த நவீன விஞ்ஞான முறையில் உரிய உபகரணங்களை பயன்படுத்தி கண்காணிக்க வேண்டுமென வேண்டுகிறோம்.
வல்லநாடு பாலத்தின் ஒரு பகுதி பல மாதங்களாக மூடப்பட்டு பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இதனால் ஒரு பாலத்தின் வழியாக மட்டுமே போக்குவரத்து நடைபெறுவதால் வாகன ஓட்டிகள்; மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்த மேம்பாலப்பணி முழுமையாக முடிந்து இரு வழிகளும் பொது மக்களின் பயன்பாட்டிற்கு திறந்து விட ஆவன செய்யுமாறு வேண்டுகிறோம்.
மைசூர் இரயில் உட்பட அனைத்து இரயில்களின் புறப்பாடு மற்றும் வருகை ஆகியவற்றை இரு மார்க்கங்களிலும் புதிய மேலூர் இரயில் நிலையத்தில் நின்று செல்வதற்கு இரயில்வே நிர்வாகம் ஆவன செய்ய வேண்டுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.
பேருந்துகளில் பணிபுரியும் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் தங்கள் பெயர் பொறித்த பேட்ஜ்களை அணிய உத்திரவிட வேண்டும். சமீபத்தில் தமிழக அரசில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களும் அடையாள அட்டை அணிந்து பணிபுரிய வேண்டும் என உத்திரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
அனைத்து பேருந்துகளிலும் வண்டியின் உட்புறம் பேருந்து எண், பணிமனையின் பெயர், தொலைபேசி எண், புகார் கொடுக்க வேண்டிய மின்னஞ்சல் ஆகியவற்றை எழுத உத்திரவிட வேண்டு;ம். நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 1987 ன்படி தகவல் அறியும் உரிமை மிகவும் முக்கியமான அம்சமாகும்." இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
இந்தJun 26, 2023 - 12:48:07 PM | Posted IP 162.1*****
இந்த 2 கட்சிகள் மாறி மாறி இருக்கும் வரை உருப்படாது, ஸ்டெர்லைட் பிரச்னை முடியாது. ஸ்மார்ட் சிட்டி சொல்லி சாக்கடை சிட்டி ஆகி விடுவார்கள். சாலையோரத்தில் மரங்களை பிடுங்கி அழித்து விடுவார்கள்.
SyedappasJun 25, 2023 - 09:18:24 PM | Posted IP 172.7*****
ஜெயலலிதா அம்மையார் வந்து தூத்துக்குடி திர டி விவிடி சிக்னல் பாலம் அமைத்து தருவதாக அடிக்கல் நாட்டுனாங்க இன்ன வரைக்கும் அதுக்குள்ள பண்டு என்ன ஆச்சு இன்னும் வர இந்த தகவல் இல்லை இப்ப உள்ள மேயர் தகுந்த நடவடிக்கை எடுத்து அதுக்குள்ள ஏற்பாடு பண்ணுங்க அப்பதான் அதிமுக ஆட்சி திமுக ஆட்சியில் மக்களுக்கு தெரியும்
ANNA ARUNJun 25, 2023 - 07:17:51 PM | Posted IP 172.7*****
Please start 1gate and 2 gate over bridge work.more than 10 times the gate was close per day.
A ராஜவேல்Jun 25, 2023 - 03:27:12 PM | Posted IP 172.7*****
தூத்துக்குடி மாநகராட்சி செயல்பாடு சுத்தமாக செயல் அற்று விட்டது மாநகராட்சி ஆணையர் மாவட்ட ஆட்சியாளர் இவர்கள் கட்சி சார்பாக பணியில் பயணிக்கின்றனர் மக்களுக்கான பிரதி நிதி இவர்கள் இல்லை தூத்துக்குடி மக்கள் நிலை பரிதாபமே அரசு ஊழியருக்கும் அரசியல் பின்னால் செல்ல ஏற்ற நபர் மாநகராட்சி அலுவலகம் என்பதில் துளி கூட சந்தேம் இல்லை
BalamuruganJun 25, 2023 - 02:18:20 PM | Posted IP 172.7*****
மேலூர் ரயில் நிலையம் குக்கிராம ரயில் நிலையம் போல் அமைக்கப்பட்டு டிக்கெட் கவுன்டரை அடைத்துவிட்டு ஓடுவதையே வாடிக்கையாக உள்ளனர் நிரந்தரமாக திறந்து பயணிகள் பயணம் சம்பந்தமாக விசாரனை செய்வதற்கு ஏற்றார்போல் பணியாளர்கள் நிரந்தர மாக பணியாற்றவேண்டும். அனைத்து ரயில்களும் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள மேலூர் ரயில் நிலையத்தில் நின்றுசெல்ல தொகுதி MP அமைச்சர், மேயர் ஆவணசெய்யவேண்டும்.
BalamuruganJun 25, 2023 - 03:22:05 AM | Posted IP 172.7*****
Start the vvd brige signal board
BalamuruganJun 25, 2023 - 03:20:47 AM | Posted IP 172.7*****
St
கே.கணேசன்.Jun 24, 2023 - 09:22:19 PM | Posted IP 172.7*****
அருமையான அவசியமான கோரிக்கைகள்.மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.🌹🙏
ராஜாJun 24, 2023 - 02:23:30 PM | Posted IP 172.7*****
good
கந்தசாமிJun 24, 2023 - 02:01:24 PM | Posted IP 162.1*****
இது எல்லாம் வாய் கிழிய பேசம் இந்த நபர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் பற்றி மட்டும் வாய் திறக்க மாட்டேன் என்கிறார் ஏன் பயமா
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி பல்நோக்கு மருத்துவமனை மகப்பேறு மருத்துவமனையாக மாற்றம்: பாஜக கண்டனம்!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 8:06:42 PM (IST)

தூத்துக்குடியில் கஞ்சா வழக்கில் கைதான 2பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 6:52:59 PM (IST)

தூத்துக்குடியில் மாற்றுத் திறனாளிகள் தின விழா: அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு
ஞாயிறு 14, டிசம்பர் 2025 12:45:11 PM (IST)

நின்று கொண்டிருந்த லாரி மீது மற்றொரு லாரி மோதி விபத்து : டிரைவர் உயிரிழப்பு
ஞாயிறு 14, டிசம்பர் 2025 10:40:48 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 3,686 வழக்குகளுக்கு தீர்வு!!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 10:32:16 AM (IST)

பெண்ணை அடித்து உதைத்து 3 பவுன் செயின் பறிப்பு : கொள்ளையனுக்கு போலீசார் வலைவீச்சு!!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 10:30:36 AM (IST)











RajanJun 27, 2023 - 12:25:46 AM | Posted IP 172.7*****