» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஸ்டெர்லைட் ஆலையில் கண்காணிப்பு கேமிரா பொருத்தும் பணிகள் தீவிரம்
புதன் 14, ஜூன் 2023 7:53:20 AM (IST)
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து கழிவுகளை அகற்றுவதற்காக ஆலை வளாகத்தில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தும் பணிகள் நடந்து வருகின்றன.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு எதிராக கடந்த 2018-ம் ஆண்டு தொடர் போராட்டம் நடந்தது. அப்போது, நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 13 பேர் இறந்தனர். இதனை தொடர்ந்து சுற்றுச்சூழல் மாசுபாடு காரணமாக ஸ்டெர்லைட் நிறுவனம் மூடப்பட்டது. இந்த நிலையில் ஆலையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்தது.
அதன்பேரில் ஸ்டெர்லைட் ஆலையில் மீதம் உள்ள ஜிப்சத்தை அகற்றவும், ஆலையின் கழிவுக்குழியில் இருந்து கழிவுநீர் வெளியேறாமல் தடுப்பது, 4-வது கழிவுக்குழியில் கரை உடையாமல் தடுப்பதற்கான சீரமைப்பு பணிகளை மேற்கொள்வது, பசுமையை பராமரிப்பது, புதர்களை அகற்றுவதற்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது.
இதனை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மேற்கண்ட பணிகளை மேற்கொள்வதற்காக தூத்துக்குடி சார் ஆட்சியர் கவுரவ்குமார் தலைமையில் 9 பேர் கொண்ட குழுவை அமைத்தார். இந்த குழுவினர் ஆலையில் ஆய்வு பணிகளை மேற்கொண்டனர். மேலும் கழிவுகள் அகற்றும் பணிகளை முழுமையாக கண்காணிப்பதற்காக ஆலை வளாகத்தில் கண்காணிப்பு கேமிராக்கள் அமைக்கவும், அந்த கேமிராக்கள் அனைத்தும் உதவி ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்படுகிற கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதனால் ஸ்டெர்லைட் ஆலை வளாகத்திலும், வாசலிலும் சுமார் 18 கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தும் பணிகள் நடந்து வருகின்றன. அதே போன்று உதவி ஆட்சியர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறையும் அமைக்கப்படுகிறது. இந்த பணிகள் முடிவடைந்த பிறகு ஆலையில் இருந்து கழிவுகள் அகற்றும் பணிகள் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் 30 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டு புதிய சாதனை
வியாழன் 18, டிசம்பர் 2025 10:30:16 AM (IST)

ரயில் பயணிகளுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் : அமைச்சர் கீதா ஜீவன் தகவல்
வியாழன் 18, டிசம்பர் 2025 10:15:07 AM (IST)

தூத்துக்குடி போக்குவரத்து காவல் ஆய்வாளர் பணியிட மாற்றம்
புதன் 17, டிசம்பர் 2025 8:52:10 PM (IST)

சிறுமிகளை பாலியல் தொந்தரவு செய்தவருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை!
புதன் 17, டிசம்பர் 2025 8:01:14 PM (IST)

தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு
புதன் 17, டிசம்பர் 2025 7:49:57 PM (IST)

முன்னாள் அமைச்சர் சி.த செல்லப்பாண்டியன் விருப்ப மனு
புதன் 17, டிசம்பர் 2025 7:42:57 PM (IST)










